Naresh Iyer feat. Sadhana Sargam - Kadhal Suthudhe текст песни

Текст песни Kadhal Suthudhe - Sadhana Sargam , Naresh Iyer




காதல் சுத்துதே என்னை சுத்துதே
கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே
ஹோ காதல் சுத்துதே என்னை சுத்துதே
கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே
இரவை நிலா சுத்துதே
இதயம் ஊர் சுத்துதே
தெய்வம் கோவில் சுத்துதே உன்னாலே
தலைமேல் பூமி சுத்துதே
பெண்ணே நீ...
பெண்ணே நீ...
பெண்ணே நீ பார்க்கும் பார்வையில்
பேசும் வார்த்தையில்
வானம் மண்ணில் சுத்துதே
ஐயோ ஏழு வண்ணத்தில் பூவை கண்டதால்
ஏனோ தலை சுத்துதே
காதல் சுத்துதே என்னை சுத்துதே
கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே
இரவை நிலா சுத்துதே
இதயம் ஊர் சுத்துதே(சுத்துதே)
மௌனமாய் உன்னை நானே
மனப்பாடம் செய்கின்றேன்
தீண்டலில் இன்பம் கண்டு
திண்டாடி துடிக்கின்றேன்
புத்தகம் நடுவே புகைப்படம் நீ
வாரத்தில் ஏழு நாள்
விடுமுறை நீ
இன்னொரு வானமாய் இருப்போமா
பூமியை தாண்டி தான் பறப்போமா
தார தாரரா தார தாரரா
காதல் தாரரா தன்னானா
முத்தத்தை கடனாய் கேட்கும்
முதலாளி இவன் தானோ
வெட்கத்தை மறந்து வந்த
விருந்தாளி இவள் தானோ
வாலிப உடலில் வசிக்கின்றேன்
புன்னகை முகத்தை ரசிகின்றேன்
காதலில் எல்லைக்குள் பறக்கின்றேன்
மீண்டும் நான் இன்றே பிறக்கின்றேன்
பார்க்கும் பார்வையில்
பேசும் வார்த்தையில்
வானம் மெல்ல சுத்துதே
ஏழு வண்ணத்தில்
பூவை கண்டதால்
ஏனோ தலை சுத்துதே
ஆஹா காதல் சுத்துதே என்னை சுத்துதே
கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே
என் இரவை நிலா சுத்துதே
இதயம் ஊர் சுத்துதே
தெய்வம் கோவில் சுத்துதே உன்னாலே
தலைமேல் பூமி சுத்துதே
அன்பே நீ...
அன்பே நீ...
பெண்ணே நீ பார்க்கும் பார்வையில்
பேசும் வார்த்தையில்
வானம் மண்ணில் சுத்துதே
ஐயோ ஏழு வண்ணத்தில் பூவை கண்டதால்
ஏனோ தலை சுத்துதே



Авторы: Srikanth Deva, Kabilan



Внимание! Не стесняйтесь оставлять отзывы.