Текст песни Ithu Kathalin - P. Jayachandran
இது காதலின் சங்கீதம்
புது குங்கும சந்தோஷம்
மாற்றும் மாலையும் ஏற்றும் தீபமும்
மங்கல பண்பாடும் ஸ்ரீ தேவியின் கல்யாணம்
மங்கல பண்பாடும் ஸ்ரீ தேவியின் கல்யாணம்
ஆணில் பாதி பெண்மை என்று வேதம் சொல்லியது
எந்த பாதி எங்கு சேரும் யார் தான் சொல்லுவது
தெய்வம் ஒன்று சேர்க்கும் சொந்தம் இங்கே சேர்கிறது
வேள்வி தீயில் சுயநலங்கள் வெந்து தீய்கிறது
நிலவினை கிரகணம் தீண்டியது
மறுபடி பௌர்ணமி தோன்றியது
விதியும் புதியது கதையும் புதியது
காலத்தின் தீர்ப்பு இது
தெய்வத்தின் சேர்ப்பு இது
இது காதலின் சங்கீதம்
புது குங்கும சந்தோஷம்
மாற்றும் மாலையும் ஏற்றும் தீபமும்
மங்கல பண்பாடும் ஸ்ரீ தேவியின் கல்யாணம்
காத்திருக்கும் சீதைக்கெல்லாம் ராமன் கிடைப்பதில்லை
ராவணர்க்கு சீதையென்று பிரம்மன் எழுதவில்லை
புதியபாதை போட்டுக் கொள்ள எவரும் மறுப்பதில்லை
பழிகள் கேட்கும் பழமை தன்னை யாரும் பொறுப்பதில்லை
பெண்ணுக்கு பெண்ணிங்கே எதிரியில்லை
பெண்மையை காட்டிலும் தெய்வமில்லை
அத்தை கண்களில் அன்னை தோன்றினால்
தோன்றினும் மாகாளி
அவள் பரிசுத்த பொன் தாயி
இது காதலின் சங்கீதம்
புது குங்கும சந்தோஷம்
மாற்றும் மாலையும் ஏற்றும் தீபமும்
மங்கல பண்பாடும் ஸ்ரீ தேவியின் கல்யாணம்
மங்கல பண்பாடும் ஸ்ரீ தேவியின் கல்யாணம்...!
Translate to English

Внимание! Не стесняйтесь оставлять отзывы.