Ranina Reddy - Malai Mangum Neram текст песни

Текст песни Malai Mangum Neram - Ranina Reddy

மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம்
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்
காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்ன
கடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும்
பூங்காற்றும் போர்வை கேட்கும் நேரம் நேரம்
தீயாய் மாறும் தேகம் தேகம்
உன் கைகள் என்னை தொட்டு போடும் கோலம்
வாழ்வின் எல்லை தேடும் தேடும்
மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம்
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்
ஒரு வீட்டில் நாமிருந்து ஒரிலையில் நம் விருந்து
இரு தூக்கம் ஒரு கனவில் மூழ்கி வாழ்க்கை தொடங்கும்
நான் சமையல் செய்திடுவேன் நீ வந்து அணைத்திடுவாய்
என் பசியும் உன் பசியும் சேர்ந்தே ஒன்றாய் அடங்கும்
நான் கேட்டு ஆசைப்பட்ட பாடல் நூறு
நீயும் நானும் சேர்ந்தே கேட்போம்
தாலாட்டை கண்ணில் சொன்ன ஆணும் நீ தான்
காலம் நேரம் தாண்டி வாழ்வோம்
மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம்
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்
காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்ன
கடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும்
பால் சிந்தும் பௌர்ணமியில் நாம் நனைவோம் பனி இரவில்
நம் மூச்சுக் காய்ச்சலில் இந்த பனியும் நடுங்கும்
வீடெங்கும் உன் பொருட்கள் அசைந்தாடும் உன் உடைகள்
தனியாக நான் இல்லை என்றே சொல்லி சினுங்கும்
தீண்டாமல் தீண்டி போகும் வாடை காற்றே
தூக்கம் தீர்ந்து நாட்கள் ஆச்சு
உன் வாசம் என்னில் பட்டும் ஆடி போனேன்
வாசல் தூணாய் நானும் ஆனேன்
மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம்
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்
காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்ன
கடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும்

Авторы: Thamarai

Ranina Reddy - Rowthiram
Альбом Rowthiram
дата релиза
20-07-2011

Внимание! Не стесняйтесь оставлять отзывы.