S. P. Balasubrahmanyam - Parthu Parthu - Male Vocals текст песни

Текст песни Parthu Parthu - Male Vocals - S. P. Balasubrahmanyam



பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன்
நீ வருவாய் என
பூத்து பூத்து புன்னகை சேர்த்துவைப்பேன்
நீ வருவாய் என
தென்றலாக நீ வருவாயா ஜன்னலாகிறேன்
தீர்த்தமாக நீ வருவாயா மேகமாகிறேன்
வண்ணமாக நீ வருவாயா பூக்களாகிறேன்
வார்த்தையாக நீ வருவாயா கவிதை ஆகிறேன்
நீ வருவாய் என
நீ வருவாய் என
பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன்
நீ வருவாய் என
பூத்து பூத்து புன்னகை சேர்த்துவைப்பேன்
நீ வருவாய் என
கரைகளில் ஒதுங்கிய கிளிஞ்சல்கள் உனக்கென
தினம் தினம் சேகரித்தேன்
குமுதமும் விகடனும் நீ படிப்பாயென
வாசகன் ஆகி விட்டேன்
கவிதை நூலோடு கோலப் புத்தகம்
உனக்காய் சேமிக்கிறேன்
கனவில் உன்னோடு என்ன பேசலாம்
தினமும் யோசிக்கிறேன்
ஒரு காகம் கா-என கரைந்தாலும்
உன் பாசம் பார்க்கிறேன்
நீ வருவாய் என
நீ வருவாய் என
பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன்
நீ வருவாய் என
பூத்து பூத்து புன்னகை சேர்த்துவைப்பேன்
நீ வருவாய் என
எனக்குள்ள வேதனை நிலவுக்குத் தெரிந்திடும்
நிலவுக்கும் ஜோடியில்லை
எழுதிய கவிதைகள் உனை வந்து சேர்ந்திட
கவிதைக்கும் கால்கள் இல்லை
உலகில் பெண் மக்கள் நூரு கோடியாம்
அதிலே நீ யாரடி?
சருகாய் அன்பே நான் காத்திருக்கிறேன்
எங்கே உன் காலடி?
மணி சரி பார்த்து தினம் வழி பார்த்து
இரு விழிகள் தேய்கிறேன்
நீ வருவாய் என
நீ வருவாய் என
பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன்
நீ வருவாய் என
பூத்து பூத்து புன்னகை சேர்த்துவைப்பேன்
நீ வருவாய் என
தென்றலாக நீ வருவாயா ஜன்னலாகிறேன்
தீர்த்தமாக நீ வருவாயா மேகமாகிறேன்
வண்ணமாக நீ வருவாயா பூக்களாகிறேன்
வார்த்தையாக நீ வருவாயா கவிதை ஆகிறேன்
நீ வருவாய் என
நீ வருவாய் என
நீ வருவாய் என
நீ வருவாய் என




S. P. Balasubrahmanyam - Nee Varuvaai Ena (Original Motion Picture Soundtrack)
Альбом Nee Varuvaai Ena (Original Motion Picture Soundtrack)
дата релиза
15-10-1999




Внимание! Не стесняйтесь оставлять отзывы.