Sadhana Sargam & K. J. Yesudas - Thanthana Thanthana (From "Thavasi") текст песни

Текст песни Thanthana Thanthana (From "Thavasi") - Sadhana Sargam , K. J. Yesudas




இரு விழி இரு விழி இமை கொட்டி அழைக்குது
உயிர் தட்டி திறக்குது
ரெக்கை கட்டி பறக்குதம்மா
ரெக்கை கட்டி பறக்குதம்மா
இரு மனம் இரு மனம் விட்டு விட்டு துடிக்குது
விண்ணை தொட்டு மிதக்குது
வெட்கம் விட்டு இணைந்ததம்மா
தந்தன தந்தன தை மாசம்
தந்தது தந்தது உன்ன தான்
சந்தன சந்தன மல்லி வாசம்
தேன் சிந்துது சிந்துது இப்ப தான்
என்னது என்னது இந்த நாணம்
மெல்ல கொல்லுது கொல்லுது என்ன தான்
தொட்டது தொட்டது இப்ப போதும்
அட மத்தது மத்தது எப்பதான்
ஆத்தாடி ஆத்தாடி
என் நெஞ்சில் காத்தாடி
அய்யா உன் முகம் பார்க்க
என் கண்ணே கண்ணாடி
தந்தன தந்தன தை மாசம்
அது தந்தது தந்தது உன்ன தான்
சந்தன சந்தன மல்லி வாசம்
தேன் சிந்துது சிந்துது இப்ப தான்
ஆண் யாரோ
பெண் யாரோ
தெரிய வேண்டுமா நீ சொல்
யார் மீது யார் யாரோ
புரிய வேண்டுமா நீ சொல்
என் காது ரெண்டும் கூச
வாய் சொன்னதென்ன நீ சொல்
அந்த நேரம் என்ன பேச
அறியாது போலே நீ சொல்
ஒரு பூவும்
அறியாமல் தேன் திருடிய ரகசியம் நீயே சொல்
இனி என்ன நான் செய்ய
இதழோரம் சொல்வாயா
இடைவேளை நீ தந்து
இமை தூங்க செல்வாயா
தந்தன தந்தன தை மாசம்
அது தந்தது தந்தது உன்ன தான்
சந்தன சந்தன மல்லி வாசம்
தேன் சிந்துது சிந்துது இப்ப தான்
ஆகாயம் போதாதே
உனது புகழையும் தீட்ட
அன்பே உன் கண் போதும்
எனது உயிரையும் பூட்ட
உன் கண்களோடு நானும்
முகம் பார்த்து வாழ வேண்டும்
உன்னை பார்த்து பார்த்து வாழ
நக கண்ணில் பார்வை வேண்டும்
உன் கையில்
உயிர் வாழ்ந்தேன்
இது தவமா வரமா புரியவில்லை
உன்னோடு என் சொந்தம்
ஈர் ஏழு ஜென்மங்கள்
உன் வார்த்தை இது போதும்
வேண்டாமே சொர்கங்கள்
தந்தன தந்தன தை மாசம்
அது தந்தது தந்தது உன்ன தான்
சந்தன சந்தன மல்லி வாசம்
தேன் சிந்துது சிந்துது இப்ப தான்
என்னது என்னது இந்த நாணம்
மெல்ல கொல்லுது கொல்லுது என்ன தான்
தொட்டது தொட்டது இப்ப போதும்
அட மத்தது மத்தது எப்பதான்
ஆத்தாடி ஆத்தாடி
என் நெஞ்சில் காத்தாடி
அய்யா உன் முகம் பார்க்க
என் கண்ணே கண்ணாடி




Внимание! Не стесняйтесь оставлять отзывы.