Shankar Mahadevan - Indiya Naade текст песни

Текст песни Indiya Naade - Shankar Mahadevan



இந்திய நாடே நீ வெறும் நீரும் நிலமா
எங்கள் உயிரின் ஸ்வாசம்
ஒரு துளி உதிரம் இருக்கிற வரைக்கும்
என் உயிர் தேசத்தை காக்கும்
மழலையில் நாங்கள் புசித்து
தேச மண்ணின் ருசி அறிந்தோம்
தத்தி தத்தி நடை பழகி
எழுந்து நின்றோமடா
என் கண்கள் தூங்காது
என் நெஞ்சம் தாங்காது
என் தேசம் மானம் தலை சாய்ந்தால்
மண் வாசம் மாறாது நம் வீரம் தோற்காது
எப்போதும் எங்கள் வெற்றி நாள் தான்
இந்திய நாடே நீ வெறும் நீரும் நிலமா
எங்கள் உயிரின் ஸ்வாசம்
ஒரு துளி உதிரம் இருக்கிற வரைக்கும்
என் உயிர் தேசத்தை காக்கும்
என் தேசம் போலே இங்கே எது வேறு எது
எனை பெற்ற நாடே உன்னை நெஞ்சில் வைத்து வாழ்வோமே
தாய் நாட்டை போல இங்கே எது வேறு எது
உயிரும் கடவுளும் நீயே
அடுத்தவன் மண்ணை தொட மாட்டோம் ஆசையில்
எதிரியை விடமாட்டோமே எல்லையில்
என் தேசக்கொடிக்கென்றும் தாழ்வில்லை
பல மொழி இனம் இருந்தாலும் தேசத்தில்
ஒன்றென இங்கு வாழ்வோமே நேசத்தில்
ஒருபோதும் நமக்குள்ளே பிரிவில்லை
பலகோடி மக்கள் வாழும் தேசம்
ஒற்றுமையே எங்களுக்கு ஸ்வாசம்
தோற்கடிப்போம் எதிரி வந்தால் அன்றே
தொப்புள்கொடி எங்களுக்கு ஒன்றே
இந்திய நாடே நீ வெறும் நீரும் நிலமா
எங்கள் உயிரின் ஸ்வாசம்
ஒரு துளி உதிரம் இருக்கிற வரைக்கும்
என் உயிர் தேசத்தை காக்கும்
மழலையில் நாங்கள் புசித்து
தேச மண்ணின் ருசி அறிந்தோம்
தத்தி தத்தி நடை பழகி
எழுந்து நின்றோமடா




Внимание! Не стесняйтесь оставлять отзывы.