Sid Sriram - Srivalli текст песни

Текст песни Srivalli - Sid Sriram




நான் பாக்குறேன், பாக்குறேன் பாக்காம நீ எங்க போற?
நீ பாக்குற, பாக்குற எல்லாம் பாக்குற என்ன தவிர
காணாத தேய்வத்த கண் மூடாம பாக்குறியே
கண் முன்னே நானிருந்தும் கடந்து போகிறியே
பார்வ கற்பூர தீபமா
ஸ்ரீ வள்ளி பேச்சே கல்யாணி ராகமா
பார்வ கற்பூர தீபமா
ஸ்ரீ வள்ளி வாசம் கஸ்தூரி வாசமா
கூட்டத்துல போனா நான் நடப்பேன் முன்னே
நீ நடந்தா மட்டும் வருவேன் உன் பின்னே
எவனையுமே பாத்து தலை குனிஞ்சது இல்ல
உன் கொலுச பாக்கத்தான் தலை குனிஞ்சேன்டி புள்ள
பாதகத்தி உன்ன நான் பாக்க சுத்தி வந்தாலும்
பாத்திடாம போறியே பாவம் பாக்காம
பார்வ கற்பூர தீபமா
ஸ்ரீ வள்ளி பேச்சே கல்யாணி ராகமா
பார்வ கற்பூர தீபமா
ஸ்ரீ வள்ளி வாசம் கஸ்தூரி வாசமா
நீ ஒண்ணும் பெரிய பேரழகி இல்ல
தேறாத கூட்டத்தில் அழகா தெரியுறடி புள்ள
பதினெட்டு வயச தொட்டாலே போதும்
நீ இல்ல எல்லா பொண்ணும் தினுசா தான் தோணும்
குத்துக்கல்லுக்கு சேல கட்டி விட்டா கூட சிட்டா தெரியும்
கொத்து பூவ கூந்தலில் வச்சா எந்த பொண்ணும் போதை ஏத்தும்
ஆனா
பார்வ கற்பூர தீபமா
ஸ்ரீ வள்ளி பேச்சே கல்யாணி ராகமா
பார்வ கற்பூர தீபமா
ஸ்ரீ வள்ளி வாசம் கஸ்தூரி வாசமா




Внимание! Не стесняйтесь оставлять отзывы.