Текст песни Kaatru Vaanga (From "Kalangarai Vilakkam") - T. M. Soundararajan
காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்
நான் காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கிப் போனாள் அந்தக் கன்னி என்ன ஆனாள்

என் உள்ளம் என்ற ஊஞ்சல் அவள் உலவுகின்ற மேடை

என் பார்வை நீந்தும் இடமோ அவள் பருவம் என்ற ஓடை
என் பார்வை நீந்தும் இடமோ அவள் பருவம் என்ற ஓடை
அதைக் கேட்டு வாங்கிப் போனாள் அந்தக் கன்னி என்ன ஆனாள்
நான் காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்
நடை பழகும்போது தென்றல் விடை சொல்லிக்கொண்டு போகும்

அந்த அழகு ஒன்று போதும் நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும்

அவள் கேட்டு வாங்கிப் போனாள் அந்தக் கன்னி என்ன ஆனாள்
நான் காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்
நல்ல நிலவு தூங்கும் நேரம் அவள் நினைவு தூங்கவில்லை

கொஞ்சம் விலகி நின்ற போதும் இந்த இதயம் தாங்கவில்லை

காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கிப் போனாள் அந்தக் கன்னி என்னவானாள்
நான் காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்…
அன்பு கிருஷ்ணா
Внимание! Не стесняйтесь оставлять отзывы.