Vishal Mishra & Karthik - Pesamal Pesi Parthen текст песни

Текст песни Pesamal Pesi Parthen - Vishal Mishra & Karthik



பேசாமல் பேசிப்பார்த்தேன்
பார்க்காமல் மீண்டும் பார்த்தேன்
புலன் ஐந்தில் பூக்கள் பூத்தேன்
புரியாமல் நெஞ்சைக்கேட்டேன்
காதல் தான் இது
போடா போ என்றது
உன்னைத்தேடியே வரச்சொன்னது
காதல் தான் இது
போடா போ என்றது
உன்னைத்தேடியே வரச்சொன்னது
அன்பே அன்பில் என்னை வென்றாய் நீயடி
அன்பே இன்னும் கொஞ்சம் என்னைக்கொல்லடி
அன்பே அன்பில் என்னை வென்றாய் நீயடி...
அன்பே இன்னும் கொஞ்சம் என்னைக்கொல்லடி
பேசாமல் பேசிப்பார்த்தேன்
பார்க்காமல் மீண்டும் பார்த்தேன்
பகலெல்லாம் இரவாய் மாற
கனவெல்லாம் உணவாய் மாற
புது பூமி வானம் பார்க்கிறேன்
நண்பர்கள் எங்கோப்போக
நாய்க்குட்டி நண்பன் ஆக
இதுதானா காதல் கேட்கிறேன்
உன்னைப்பார்க்கும் முன்
வெறும் பாதை நானடி ஓ...
உனைப்பார்த்தப்பின் சிற்ப்பம் தானடி
அன்பே அன்பில் என்னை வென்றாய் நீயடி
அன்பே இன்னும் கொஞ்சம் என்னைக் கொல்லடி
அன்பே அன்பில் என்னை வென்றாய் நீயடி
அன்பே இன்னும் கொஞ்சம் என்னைக் கொல்லடி
பேசாமல் பேசிப்பார்த்தேன்
பார்க்காமல் மீண்டும் பார்த்தேன்
காதல்தான் வாராவிட்டால்
கண்தூக்கம் எங்கோப்போகும்
வந்தாலும் தூக்கம் போகுதேய்
கண்பார்த்து பேசிடும் என்னை
வேறெங்கோப் பார்த்திட வைத்தாய்
புதிதாய் ஒரு கூச்சம் தோன்றுதே
உந்தன் கைகளில் என் கைகள் கோர்க்கிறேன்
இந்த ஓர் நொடி நான் வாழ்கிறேன்
அன்பே அன்பில் என்னை வென்றாய் நீயடி
அன்பே இன்னும் கொஞ்சம் என்னைக் கொல்லடி
அன்பே அன்பில் என்னை வென்றாய் நீயடி
அன்பே இன்னும் கொஞ்சம் என்னைக் கொல்லடி
பேசாமல் பேசிப்பார்த்தேன்
பார்க்காமல் மீண்டும் பார்த்தேன்



Авторы: Muthukumar Na, Vishal Mishra


Vishal Mishra & Karthik - Devi (Original Motion Picture Soundtrack)
Альбом Devi (Original Motion Picture Soundtrack)
дата релиза
27-09-2016



Внимание! Не стесняйтесь оставлять отзывы.