A. R. Rahman feat. Karthik - Praaptham (Tamil) Lyrics

Lyrics Praaptham (Tamil) - A. R. Rahman , Karthik




எங்கே எங்கே வீழ்வோம் என்றே
அறியா மழை துளிகள்
விதை மேல் ஒன்றாய்
சிதை மேல் ஒன்றாய்
வீழ்வதே...
பிராப்தம் பிராப்தம்
விதி வேட்கையே
பிராப்தம் பிராப்தம்
சூழ்கிறதே
இதயமற்ற காலமே உதிரம் சூழ்கிறதே
உதிரம் சூழ்கிறதே
வாழ்வையே உதிரம் சூழ்கிறதே
எந்த வழி ஏக
எந்த வழி ஏக
ஓஹோ... ஓ... ஓ... ஓ...
ஓஹோ... ஓ... ஓ... ஓ...
ஆசை தீயில் லோகம் வேகின்ற போது
வானும் மண்ணும் செக்க சிவக்கும்
கடல் நீளம் எல்லாம் உதிரம் ஆனால்
செம்மழை தானே வைய்யம் எங்கும் பெய்யும்
உதிரம் சூழ்கிறதே
உதிரம் சூழ்கிறதே
உதிரம் சூழ்கிறதே வாழ்வையே
ஓஹோ... ஓ... ஓ... ஓ...
ஓஹோ... ஓ... ஓ... ஓ...
ஆசை தீயில் லோகம் வேகின்ற போது
வானும் மண்ணும் செக்க சிவக்கும்
கடல் நீளம் எல்லாம் உதிரம் ஆனால்
செம்மழை தானே
வைய்யம் எங்கும் பெய்யும்
வெற்றிகளோ
தோல்விகளோ
முடிவுகளோ கூட பிராப்தம்
கோள்கள் எல்லாம் சூரியனை சுற்றுவதும்
காலத்தின் சரிபாதி இருளுக்குள் நீந்துவதும்
வாழ்வோடு நீ காணும்
வரம் போன்ற சாபம் எல்லாம்
இன்பம் போல் காணும் துன்பம் எல்லாம் பிராப்தம்
இன்பம் போல் துன்பம் பிராப்தம்
ஓஹோ... ஓ... ஓ... ஓ...
ஓஹோ... ஓ... ஓ... ஓ...



Writer(s): RAMASAMY THEVAR VAIRAMUTH, AR RAHMAN


A. R. Rahman feat. Karthik - Chekka Chivantha Vaanam (Original Motion Picture Soundtrack)



Attention! Feel free to leave feedback.
//}