Chinmayi Sripada - Sara Sara Saara Kathu Lyrics

Lyrics Sara Sara Saara Kathu - Chinmayi Sripada




சரசர சாரக்காத்து வீசும் போதும்
Sir'ah பாத்து பேசும்போதும்
சாரப்பாம்பு போல நெஞ்சு சத்தம்போடுதே
சரசர சாரக்காத்து வீசும் போதும்
Sir'ah பாத்து பேசும்போதும்
சாரப்பாம்பு போல நெஞ்சு சத்தம்போடுதே
இத்து இத்து இத்துப்போன நெஞ்சு தைக்க
ஒத்தப்பார்வை பார்த்து செல்லு
மொத்த சொத்தை எழுதித்தாரேன் மூச்சு உட்பட
இத்து இத்து இத்துப்போன நெஞ்சு தைக்க
ஒத்தப்பார்வை பார்த்து செல்லு
மொத்த சொத்தை எழுதித்தாரேன் மூச்சு உட்பட
டீ போல நீ
என்னைய ஆத்துற
சரசர சாரக்காத்து வீசும் போதும்
Sir'ah பாத்து பேசும்போதும்
சாரப்பாம்பு போல நெஞ்சு சத்தம்போடுதே
எங்க ஊரு புடிக்குதா
எங்கத் தண்ணி இனிக்குதா
சுத்தி வரும் காத்துல
சுட்ட ஈரல் மணக்குதா
முட்டக்கோழி புடிக்கவா
மொறைப்படி சமைக்கவா
எலும்புகள் கடிக்கையில்
எனைக்கொஞ்சம் நினைக்கவா
கம்மஞ்சோறு ருசிக்கவா
சமைச்ச கைய கொஞ்சம் ரசிக்கவா
மொடக்கத்தான் ரசம் வச்சி மடக்கத்தான் பாக்குறேன்
ரெட்டை தோசை சுட்டு வச்சு காவக் காக்கரேன்
மொக்குன்னே நொங்கு நான் நிக்கிறேன்
மண்டு நீ கங்கைய கேக்கறே
சரசர சாரக்காத்து வீசும் போதும்
Sir'ah பாத்து பேசும்போதும்
சாரப்பாம்பு போல நெஞ்சு சத்தம்போடுதே
புல்லு கட்டு வாசமா
புத்திக்குள்ள வீசுர
மாட்டு மணி சத்தமா
மனசுக்குள் கேக்குறே
கட்டவண்டி ஓட்டுறே
கையளவு மனசுல
கையெழுத்து போடுறே
கன்னிப்பொண்ணு மார்புல
மூணு நாளா பாக்கல
ஊரில் எந்த பூவும் பூக்கல
ஆட்டுக்கல்லு குழியிலே
உறங்கிப்போகும் பூனையா
வந்து வந்து பார்த்து தான் கிறங்கி போறயா
மீனுக்கு ஏங்கற கொக்கு நீ
கொத்தவே தெரியல மக்கு நீ
சரசர சாரக்காத்து வீசும் போதும்
Sir'ah பாத்து பேசும்போதும்
சாரப்பாம்பு போல நெஞ்சு சத்தம்போடுதே
சரசர சாரக்காத்து வீசும் போதும்
Sir'ah பாத்து பேசும்போதும்
சாரப்பாம்பு போல நெஞ்சு சத்தம்போடுதே
இத்து இத்து இத்துப்போன நெஞ்சு தைக்க
ஒத்தப்பார்வை பார்த்து செல்லு
மொத்த சொத்தை எழுதித்தாரேன் மூச்சு உட்பட
இத்து இத்து இத்துப்போன நெஞ்சு தைக்க
ஒத்தப்பார்வை பார்த்து செல்லு
மொத்த சொத்தை எழுதித்தாரேன் மூச்சு உட்பட
டீ போல நீ
என்னைய ஆத்துற
காட்டு மல்லிக பூத்துருக்குது
காதலா காதலா
வந்து வந்து ஓடிப்போகும்
வண்டுக்கென்ன காய்ச்சலா



Writer(s): Vairamuthu, Mohamaad Ghibran


Attention! Feel free to leave feedback.