Chitra - Parthu Parthu (Female Vocals) Lyrics

Lyrics Parthu Parthu (Female Vocals) - Chitra



பாடகி: கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர்: எஸ்.எ. ராஜ்குமார்
பெண்: பார்த்துப் பார்த்துக்
கண்கள் பூத்திருப்பேன்
நீ வருவாயென
பூத்துப் பூத்துப்
புன்னகை சேர்த்து வைப்பேன்
நீ வருவாயென
பெண்: தென்றலாக நீ வருவாயா
ஜன்னலாகிறேன்
தீர்த்தமாக நீ வருவாயா
மேகமாகிறேன்
பெண்: வண்ணமாக நீ வருவாயா
பூக்களாகிறேன்
வார்த்தையாக நீ வருவாயா
கவிதை ஆகிறேன்
குழு: நீ வருவாயென நீ வருவாயென
பெண்: பார்த்துப் பார்த்துக்
கண்கள் பூத்திருப்பேன்
நீ வருவாயென
பூத்துப் பூத்துப்
புன்னகை சேர்த்து வைப்பேன்
நீ வருவாயென
பெண்: கரைகளில் ஒதுங்கிய
கிளிஞ்சல்கள் உனக்கென
தினம்தினம் சேகரித்தேன்
பெண்: குமுதமும் விகடனும்
நீ படிப்பாயென
வாசகி ஆகி விட்டேன்
பெண்: கவிதை நூலோடு கோலப் புத்தகம்
உனக்காய் சேமிக்கிறேன்
கனவில் உன்னோடு என்ன பேசலாம்
தினமும் யோசிக்கிறேன்
ஒரு காகம் காவெனக் கரைந்தாலும்
என் வாசல் பார்க்கிறேன்
குழு: நீ வருவாயென நீ வருவாயென
பெண்: பார்த்துப் பார்த்துக்
கண்கள் பூத்திருப்பேன்
நீ வருவாயென
பூத்துப் பூத்துப்
புன்னகை சேர்த்து வைப்பேன்
நீ வருவாயென
குழு: ஆஆ... ஆஅ.ஆஅ...
ஆஆ... ஆஅ.ஆஅ...
பெண்: எனக்குள்ள வேதனை
நிலவுக்குத் தெரிந்திடும்
நிலவுக்கும் ஜோடியில்லை
பெண்: எழுதிய கவிதைகள்
உனை வந்து சேர்ந்திட
கவிதைக்கும் கால்கள் இல்லை
பெண்: இமைகள் என்னோடு சண்டை போடுதே
எதிரே வந்தால் என்ன
தினமும் கண்ணோரம் தீபம் வைக்கிறேன்
வெளிச்சம் தந்தால் என்ன
பெண்: மணி சரிபார்த்து
தினம் வழிபார்த்து
இரு விழிகள் தேய்கிறேன்
குழு: நீ வருவாயென நீ வருவாயென
பெண்: பார்த்துப் பார்த்துக்
கண்கள் பூத்திருப்பேன்
நீ வருவாயென
பூத்துப் பூத்துப்
புன்னகை சேர்த்து வைப்பேன்
நீ வருவாயென
பெண்: தென்றலாக நீ வருவாயா
ஜன்னலாகிறேன்
தீர்த்தமாக நீ வருவாயா
மேகமாகிறேன்
பெண்: வண்ணமாக நீ வருவாயா
பூக்களாகிறேன்
வார்த்தையாக நீ வருவாயா
கவிதை ஆகிறேன்
குழு: நீ வருவாயென நீ வருவாயென
நீ வருவாயென நீ வருவாயென



Writer(s): S.A. RAJKUMAR, BHASKARA BHATLA


Chitra - Nee Varuvaai Ena (Original Motion Picture Soundtrack)



Attention! Feel free to leave feedback.