Dhilip Varman - Kanavellam Lyrics

Lyrics Kanavellam - Dhilip Varman




கனவெல்லாம் நீதானே...
விழியே உனக்கே உயிரானேன்
நினைவெல்லாம் நீதானே...
கலையாத யுகம் சுகம் தானே
பார்வை உன்னை அலைகிறதே
உள்ளம் உன்னை அணைக்கிறதே
அந்த நேரம் வரும் பொழுது
என்னை வதைகின்றதே
கனவெல்லாம் நீதானே...
விழியே உனக்கே உயிரானேன்
நினைவெல்லாம் நீதானே...
கலையாத யுகம் சுகம் தானே
சாரல் மழை துளியில்
உன் ரகசியத்தை வெளிபார்த்தேன்
நாணம் நான் அறிந்தேன்
கொஞ்சம் பனி பூவாய் நீ குறுக
எனை அறியாமல் மனம் பறித்தாய்
உன்னை மறவேனடி...
நிஜம் புரியாத நிலை அடைந்தேன்
எது வரை சொல்லடி...
காலம் தோறும் நெஞ்சில் வாழும்
உந்தன் காதல் ஞாபங்கள் தினம் தினம்
கனவெல்லாம் நீதானே...
விழியே உனக்கே உயிரானேன்
நினைவெல்லாம் நீதானே...
கலையாத யுகம் சுகம் தானே
தேடல் வரும் பொழுது
என் உணர்வுகளும் கலங்குதடி
காணலாய் கிடந்தேன் நான்
உன் வரவால் விழி திறந்தேன்
இணை பிரியாத நிலை பெறவே
நெஞ்சில் யாகமே...
தவித்திடும் போது ஆறுதலாய்
உன்மடி சாய்கிறேன்...
காலம் தோறும் நெஞ்சில் வாழும்
உந்தன் காதல் ஞாபங்கள் தினம் தினம்
கனவெல்லாம் நீதானே...
விழியே உனக்கே உயிரானேன்
பார்வை உன்னை அலைகிறதே
உள்ளம் உன்னை அணைக்கிறதே
அந்த நேரம் வரும் பொழுது
என்னை வதைகின்றதே
கனவெல்லாம் நீதானே...
விழியே உனக்கே உயிரானேன்
நினைவெல்லாம் நீதானே...
கலையாத யுகம் சுகம் தானே



Writer(s): Dhilip Varman



Attention! Feel free to leave feedback.