Sirkazhi Govindarajan - Om Enum Pranava Lyrics

Lyrics Om Enum Pranava - Sirkazhi Govindarajan




ஓம் என்னும் ப்ரணவ ரூப நாயகா
உமையவளின் பாலனே விநாயகா
தேவர் மூவர் போற்றும் வேத நாயகா
தேவாதி தேவனே விநாயகா.
வல்வினைகள் தீர்க்கும் சக்தி நாயகா
வேண்டும் வரம் தந்திடும் விநாயகா
மௌனத்தின் முழுப்பொருளே நாயகா
முக்கண்ணன் மைந்தனே விநாயகா.
பக்தர்களின் உறைவிடமே நாயகா - சர்வ
சக்திகளின் பிறப்பிடம் விநாயகா
முக்திதனை அளித்திடுவாய் நாயகா - உனை
நித்தம் பணிந்திடுவோம் நாயகா.



Writer(s): Dr Seerkazhi Govindarajan



Attention! Feel free to leave feedback.