Ilaiyaraaja - Thenpaandi Thamizhe (Male) Lyrics

Lyrics Thenpaandi Thamizhe (Male) - Ilaiyaraaja




தென்பாண்டித் தமிழே
என் சிங்காரக்குயிலே
தென்பாண்டித் தமிழே
என் சிங்காரக்குயிலே
இசை பாடும் ஒரு காவியம்
இது ரவிவர்மாவின் ஓவியம்
பாசமென்னும் ஆலயம்
இன்று பாடும் சோகம் ஆயிரம்
தென்பாண்டித் தமிழே
என் சிங்காரக்குயிலே
கோடு மீறி போனதே போட்டு வைத்த புள்ளிகள்
கோலம் மாறி போனதே வீட்டில் இன்று நிலைமைகள்
அன்பு என்னும் தூண்டிலே வாடும் இந்த பூங்குயில்
சோக ராகம் பாடுதே துன்பம் கண்டு வாடுதே
தாவி வந்த பிள்ளையும் தாயை பார்த்து தவிக்குதே
தாயை போன்ற அண்ணனும் போன நாளை நினைக்குதே
சேர்ந்த பாதை பிரிந்ததே சென்ற காலம் மறந்ததே
நாளும் என்ன சோதனை இன்று இந்த வேதனை
அட என்ன இந்த வேதனை
தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே
தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே
தேகம் வேறு ஆகலாம் ஜீவன் ஒன்று தானம்மா
காலம் மாறி போகலாம் என் அன்பு ஒன்று தானம்மா
கன்று கண்ட தாய் பசு துன்பம் கண்டு வாடுது
இன்று என்ன ஆனது ஏக்கம் கொண்டு வாழுது
கூடு வாழும் குருவிகள் பாடும் பாச பறவைகள்
சேர்ந்து வந்த உறவிலே இன்று என்ன பிரிவினை
அன்பு என்ற நினைவு தான் மறந்ததென்ன மனதினை
கண்ணில் வந்த காவிரி இன்று தீர்ந்து போனதே
வழி பாதை மாறி போனதே
தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே
தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே
இசை பாடும் ஒரு காவியம் இது ரவிவர்மாவின் ஓவியம்
பாசம் என்னும் ஆலயம் இன்று பாடும் சோகம் ஆயிரம்
தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே
தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே



Writer(s): Ilaiyaraaja, Gangai Amaren


Attention! Feel free to leave feedback.
//}