Ilaiyaraaja - Vikram Vikram Lyrics

Lyrics Vikram Vikram - Ilaiyaraaja



விக்ரம்
விக்ரம்
(விக்ரம்)
(விக்ரம்)
நான் வெற்றி பெற்றவன்
இமயம் தொட்டு விட்டவன்
பகையை முட்டிவிட்டவன்
தீயை சுட்டுவிட்டவன்
என் வீரமே வாகையே சூடும்
விக்ரம்
விக்ரம்
(விக்ரம்)
(விக்ரம்)
தேர் செல்லட்டும் என் பேர் வெல்லட்டும்
தேர் செல்லட்டும் என் பேர் வெல்லட்டும்
ரதகஜ படை எங்கும் செல்லும்
விண்ணை வெல்லும்
வானும் மண்ணும்-ஹ-ஹா
என் பேர் சொல்லும்
ஓ-உறவுகள் எனக்கென இருந்தது
ஆ-கனவுகள் பாதியில் கலைந்தது
ஆம்-பழி என்னும் விதை நெஞ்சில் விழுந்தது
ஹ-பயிரென தினம் அது வளர்ந்தது
யுத்தத்தால் அதோ அதோ விடியுது
சத்தத்தால் அராஜகம் அழியுது
ரத்தத்தால் அதோ தலை உருளுது
சொர்க்கங்கள் இதோ இதோ தெரியுது
துடிக்குது புஜம், ஜெயிப்பது நிஜம்
தகிட-தக்தீம்த-தக்தீம்த-தகிட
தக்தீம்த-தக்தீம்த-தகிட
தக்தீம்த-தக்தீம்த-தகிட
ஹு-ஹ-ஹ-ஹ-ஹ
விக்ரம்
விக்ரம்
(விக்ரம்)
(விக்ரம்)
யார் வட்டங்கள் இவை யார் சட்டங்கள்
யார் வட்டங்கள் இவை யார் சட்டங்கள்
இனி ஒரு விதி செய்வோம் இன்றே ஜகத்தை வென்றே
தீமை கொன்றே செய்வோம் நன்றே
ஹே-பகைவனுக் கருள்வது பிழையே
வா-பகைவனை அழிப்பது முறையே
ம்-பொறுப்பது புழுக்களின் இனமே
ஆம்-அழிப்பது புலிகளின் குணமே
எட்டிப்போ இதோ புலி வருகுது
திட்டத்தால் அடாவடி ஒழியுது
சித்தத்தில் மனோபலம் வருகுது
மொத்தத்தில் அதோ பகை அழியுது
துடிக்குது புஜம், ஜெயிப்பது நிஜம்
தகிட-தக்தீம்த-தக்தீம்த-தகிட
தக்தீம்த-தக்தீம்த-தகிட
தக்தீம்த-தக்தீம்த-தகிட
ஹு-ஹ-ஹ-ஹ-ஹ
விக்ரம்
விக்ரம்
(விக்ரம்)
(விக்ரம்)
நான் வெற்றி பெற்றவன்
இமயம் தொட்டு விட்டவன்
பகையை முட்டிவிட்டவன்
தீயை சுட்டுவிட்டவன்
என் வீரமே வாகையே சூடும்
விக்ரம்
விக்ரம்
(விக்ரம்)
(விக்ரம்)



Writer(s): Ilaiyaraaja, Kabilan Vairamuthu


Ilaiyaraaja - Vikram (Original Motion Picture Soundtrack)
Album Vikram (Original Motion Picture Soundtrack)
date of release
01-01-1986




Attention! Feel free to leave feedback.