Karthik - Ulaviravu Lyrics

Lyrics Ulaviravu - Karthik



தூரத்து காதல்
என் கோப்பை தே நீர் அல்ல
மின் முத்தம் ஏதும்
உன் மெய் முத்தம் போலே அல்ல
நேரில் நீ நிற்பாயா?
என் ஆசை எல்லாமே கேட்பாயா?
என் கை கொர்ப்பாயா?
காதாலி
நீ என்னோடு வா உலவிரவு
காதலி
நீ என்னோடு வா உலவிரவு
காலத்தை கொஞ்சம்
ஹே பின்னோக்கி ஓட சொல்லு
வேகங்கள் வேண்டாம்
ஹே பெண்ணே நீ கொஞ்சம் நில்லு
என் கண்ணே பார்ப்பாயா?
என் காதல் கோரிக்கைகள் கேட்பாயா?
என் கை கொர்ப்பாயா?
காதலி
நீ என்னோடு வா உலவிரவு
காதலி
நீ என்னோடு வா உலவிரவு
பேருந்தில் ஏறி
பெருந்தூரம் சென்று
தெரியாத ஊரில்
நடப்போமே இன்று
நமக்கு பிடிக்கா கதைகள் ரசித்து
வேதியல், இயற்பியல், கணிதம் படித்து
திரியில் சுடர் ஆட
ஒளி நாட பாட
உன் விழியில் நானும்
என் வாழ்க்கையினை தேட
காதலி
நீ என்னோடு வா உலவிரவு
காதலி
நீ என்னோடு வா உலவிரவு
கூடாரம் போட்டு
குளிர் காய்ந்த பின்னே
விண்மீன்கள் எண்ணி
துயில்வோம் வா பெண்ணே
கொட்டும் அருவியில்
கட்டிக்கொண்டு குளிப்போம்
நீர் வாழை பிடித்து
தீயில் வாட்டி சமைப்போம்
குறும் பார்வை வேண்டும்
குறும் செய்தி அல்ல
கை-பேசி வீசி
நாம் கை வீசி செல்ல
காதலி
நீ என்னோடு வா உலவிரவு
காதலி
நீ என்னோடு வா உலவிரவு
தூரத்து காதல்
என் கோப்பை தேநீர் அல்ல
மின் முத்தம் ஏதும்
உன் மெய் முத்தம் போலே அல்ல
நீரில் நீ நிற்பாயா?
என் ஆசை எல்லாமே கேட்பாயா?
என் கை கொர்ப்பாயா?
என் கை கொர்ப்பாயா?
என் கை கொர்ப்பாயா?
என் கை கொர்ப்பாயா?




Karthik - Ulaviravu (From "Ondraga Originals")
Album Ulaviravu (From "Ondraga Originals")
date of release
14-02-2018




Attention! Feel free to leave feedback.