Malaysia Vasudevan - Oh Oru Thendral Lyrics

Lyrics Oh Oru Thendral - Malaysia Vasudevan



ஒரு தென்றல் புயலாகி வருமே
ஒரு தெய்வம் படி தாண்டி வருமே
கால தேவனின் தர்ம எல்லைகள் மாறுகின்றதே
கால தேவனின் தர்ம எல்லைகள் மாறுகின்றதே
ஒரு தென்றல் புயலாகி வருமே
அடுக்களை துடைப்பதும் படுக்கையை விரிப்பதும்
அது பெண்ணின் தொழில் இல்லையே
சரித்திரம் படிக்கவும் தரித்திரம் துடைக்கவும்
வருவதில் பிழை இல்லையே
அடுக்களை துடைப்பதும் படுக்கையை விரிப்பதும்
அது பெண்ணின் தொழில் இல்லையே
சரித்திரம் படிக்கவும் தரித்திரம் துடைக்கவும்
வருவதில் பிழை இல்லையே
சுற்றம் என்ன சொன்னாலும்
தூய்மை ஒன்று தான் சொந்தம்
காவல் காக்கும் எந்நாளும்
கற்பு என்னும் தீப் பந்தம்
இரவும் பகலும் வியர்வை வழிய கரைகிறதே
ரத்தம்
ஒரு தென்றல் புயலாகி வருமே
ஒரு தெய்வம் படி தாண்டி வருமே
கால தேவனின் தர்ம எல்லைகள் மாறுகின்றதே
கால தேவனின் தர்ம எல்லைகள் மாறுகின்றதே
நிலவினில் இருக்கின்ற களங்கத்தை
இவளது பெரு விரல் துடைத்து விடும்
புது யுகம் மகள் இவள் அணிகின்ற வளையல்கள்
சிறைகளை உடைத்து விடும்
நிலவினில் இருக்கின்ற களங்கத்தை
இவளது பெரு விரல் துடைத்து விடும்
புது யுகம் மகள் இவள் அணிகின்ற வளையல்கள்
சிறைகளை உடைத்து விடும்
பாரிஜாத பூம்பாவை
பாதியாகிப் போனாலே
தேகம் எங்கும் புண்ணாகி
தேதி போல தேயந்தாலே
செடியை பிரிந்த பிறகும்
செடிக்கு உயிர் தருதே
பூவே
ஒரு தென்றல் புயலாகி வருமே
ஒரு தெய்வம் படி தாண்டி வருமே
கால தேவனின் தர்ம எல்லைகள் மாறுகின்றதே
கால தேவனின் தர்ம எல்லைகள் மாறுகின்றதே
கால தேவனின் தர்ம எல்லைகள் மாறுகின்றதே
கால தேவனின் தர்ம எல்லைகள் மாறுகின்றதே



Writer(s): Ilaiyaraaja, Vairamuthu


Malaysia Vasudevan - Pudumai penn (Original Motion Picture Soundtrack) - EP




Attention! Feel free to leave feedback.