Padmapriya Raghavan - Yar Endru Lyrics

Lyrics Yar Endru - Padmapriya Raghavan




ஹ்ம்ம் ம்ம் மேஹதூதம்
ஹ்ம்ம் ம்ம் மேஹதூதம்
ஹ்ம்ம் ம்ம் பாடவேண்டும் ஹ்ம்ம் ம்ம்
கானல் ஆகுமோ
காரிகை கனவு
தாகம் தீர்க்குமோ
கோடையின் நிலவு
தொலைவிலே வெளிச்சம்
தனிமையில் உருகும் அனிச்சம்
கனவுதான் இதுவும்
கலைந்திடும் என நெஞ்சில் நெஞ்சில்
தினம் வருதே அச்சம்
மேகதூதம் பாட வேண்டும்
மேனி மீது சாரல் வேண்டும்
காளிதாசன் காண வேண்டும்
வானவில் வரும் வாழ்வில் மீண்டும்
ஹ்ம்ம் ம்ம் மேஹதூதம்
ஹ்ம்ம் ம்ம் மேஹதூதம்
ஹ்ம்ம் ம்ம் பாடவேண்டும் ஹ்ம்ம் ம்ம்
நானும் நீயும் காலம் எழுதி
காற்றில் வீசிய நாடகம்
அந்த காற்றே மீண்டும் இணைத்து
அரங்கம் ஏற்றும் காவியம்
தேவ முல்லை பூக்கும் கொள்ளை
கொண்டதே என் வீட்டின் எல்லை
என்னை நீ மறவாதிரு
புயல் காற்றிலும் பிரியாதிரு
மேகதூதம் பாட வேண்டும்
மேனி மீது சாரல் வேண்டும்
காளிதாசன் காண வேண்டும்
வானவில் வரும் வாழ்வில் மீண்டும்
தும்பை போலே தூய அழகை
உன்னிடம்தான் காண்கிறேன்
என் கை நீட்டி ஏந்தி அணைக்கும்
நாளை எண்ணி ஏங்கினேன்
இந்த வார்த்தை கேட்க்கும் போது
ஈரம் ஊறும் கண்ணின் மீது
பாவையின் இந்த ஈரம்தான்
கருமேகமாய் உருமாருதே
கானல் ஆகுமோ
காரிகை கனவு
தாகம் தீர்க்குமா
கோடையின் நிலவு
தொலைவிலே வெளிச்சம்
தனிமையில் உருகும் அனிச்சம்
கனவுதான் இதுவும்
கலைந்திடும் என நெஞ்சில் நெஞ்சில்
தினம் வருதே அச்சம்



Writer(s): Sundaramurthy Ks, Padmapriya Raghavan



Attention! Feel free to leave feedback.