S. P. Balasubrahmanyam - Nallathor Veenai - From "Varumayin Niram Sivappu" Lyrics

Lyrics Nallathor Veenai - From "Varumayin Niram Sivappu" - S. P. Balasubrahmanyam



நல்லதோர் வீணைசெய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
நல்லதோர் வீணைசெய்தே
சொல்லடி சிவசக்தி
எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்தது விட்டாய்
சொல்லடி சிவசக்தி
நல்லதோர் வீணைசெய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
நல்லதோர் வீணைசெய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி
எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்தது விட்டாய்
சொல்லடி சிவசக்தி
எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்தது விட்டாய்
வல்லமை தாராயோ
இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே
சொல்லடி சிவசக்தி
நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ
நல்லதோர் வீணைசெய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ
விசையுறு பந்தினைப் போல்
விசையுறு பந்தினைப் போல்
உள்ளம் வேண்டிய படிசெல்லும் உடல் கேட்டேன்
நசையறு மனம் கேட்டேன்
நித்தம் நவம்எனச் சுடர்தரும் உயிர்கேட்டேன், உயிர்கேட்டேன், உயிர்கேட்டேன்
தசையினைத் தீசுடினும்
சிவ சக்தியைப் பாடும்நல் அகம்கேட்டேன்
அசைவறு மதிகேட்டேன், இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?
இவை அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ...
நல்லதோர் வீணைசெய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
நல்லதோர் வீணைசெய்தே...



Writer(s): BHARATHIAR, L. VAIDHYANATHAN


S. P. Balasubrahmanyam - Fabulous S. P. Balasubrahmanyam - Tamil
Album Fabulous S. P. Balasubrahmanyam - Tamil
date of release
27-05-2016




Attention! Feel free to leave feedback.