Shreya Goshal - Yaarathu Yaarathu Lyrics

Lyrics Yaarathu Yaarathu - Shreya Goshal




யாரது யாரது இடைவிடாது இசைப்பது
இலைகளா கிளைகளா கிளிகளா
யாரது யாரது இடைவிடாது இசைப்பது
இலைகளா கிளைகளா கிளிகளா
யாரது யாரது தலையை ஆட்டி ரசிப்பது
பூக்களா பறவையா நதிகளா
கடலில் நீந்தும் மீனை இன்று
கிண்ணத்தில் வைப்பது நியாயம் இல்லை
விளக்கின் அடியில் தேங்கி நிற்க்கும்
இருட்டை யாரும் பார்ப்பதில்லை
யாரது யாரது யாரது
யாரது யாரது இடைவிடாது இசைப்பது
இலைகளா கிளைகளா கிளிகளா
ஒரே நிலா தினம் வேராய் முகம் காட்டுமா
ஒரே மரம் தினம் நூறாய் நிறம் காட்டுமா
அதே கடல் தினம் தினம் இசை மீட்டுமா
அதே விழி கனாக்களை நித்தம் மாற்றுமா
தண்ணீரிலே தத்தளித்து எரும்புகள் நின்றாலும்
ஏதோ ஒரு இலை வந்து பின்தொடர்ந்து படகாகும்
வெளிச்சம் வரும் வழியை நீ சொல் சொல் சொல் சொல்
யாரது யாரது இடைவிடாது இசைப்பது
இலைகளா கிளைகளா கிளிகளா
மேகங்களே மழை நனைய திரை செய்யுமா
மரங்களே மைனாவுக்கு ஒர் வலை ஆகுமா
பட்டாம்பூச்சி ரயில் தடம் மேலே பறக்குமா
வேரின் மேலே வெண்ணீர் விட்டால் பூ பூக்குமா
வெய்யில் தரும் புழுக்கமெல்லாம் மழை வர வழி வகுக்கும்
வலி தரும் பெருஞ்சுமை தான் மழலைக்கு வழி வகுக்கும்
வெளிச்சம் வரும் வழியை நீ சொல் சொல் சொல் சொல்
யாரது யாரது இடைவிடாது இசைப்பது
இலைகளா கிளைகளா கிளிகளா
யாரது யாரது தலையை ஆட்டி ரசிப்பது
பூக்களா பறவையா நதிகளா
கடலில் நீந்தும் மீனை இன்று
கிண்ணத்தில் வைப்பது நியாயம் இல்லை
விளக்கின் அடியில் தேங்கி நிற்க்கும்
இருட்டை யாரும் பார்ப்பதில்லை
யாரது யாரது யாரது
யாரது யாரது
நி நி நி நி
ரி
யாரது யாரது
ரி
நி நி நி ரி
யாரது யாரது
நி நி நி
நி நி நி நி
ரி நி நி ரி
யாரது யாரது
நி நி ரி நி
நி ரி நி ரி நி



Writer(s): Snehan, Deva



Attention! Feel free to leave feedback.