Udit Narayan, Sadhana Sargam - Venaam Vennam Lyrics

Lyrics Venaam Vennam - Udit Narayan , Sadhana Sargam



வேணா வேணா விழுந்திடுவேனா
கண்கள் கண்டால் கவுந்திடுவேனா
ஓரு முறை சிரிக்கிறாய்
என் உயிரினை பறிக்கிறாய்
கண்கள் ரெண்டும் அணுகுண்டா
கத்தி உள்ள பூச்செண்டா
இன்பமான சிறை உண்டா
ஈர விழியில் இடம் உண்டா
கடவுள் பூமி வந்தால்
உன் கண்ணை பார்க்க வேண்டும்
மனிதன் பாவம் என்று
அவன் மறைந்து போக வேண்டும்
வேணா வேணா விழுந்திடுவேனா
கண்கள் கண்டால் கவுந்திடுவேனா
வளையாத நதிகள் எல்லாம் நதிகள் என்று ஆகாது
சிணுங்காத கொலுசுகள் எல்லாம் சங்கீதங்கள் பாடாது
மடியினில் தலையணை செய்தாய்
மெல்ல வந்து மனதினில் கலவரம் செய்தாய்
ஒரு கண்ணில் வன்முறை செய்தாய்
பாவம் என்று மறு கண்ணில் மருந்துகள் தந்தாய்
ஓஹோ வசீகரா வசீகரா
நீ வதம் செய்ய நிதம் வர வேண்டும்
வலைக்கரம் உடைத்திட வேண்டும்
இதயம் வருடி விடவா உன் இதயம் திருடி விடவா
விழியில் நுழைந்து விடவா என் வழியை மறந்து விடவா
வேணா வேணா விழுந்திடுவேனா
கண்கள் கண்டால் கவுந்திடுவேனா
அய்யய்யோ Hitler பெண்ணே என்னை என்ன செய்தாயோ
Hormone'கள் ஹார்மோனியம்கள் வாசிப்பதை கண்டாயோ
January நிலவென்னை கொள்ளும் வெட்கமின்றி ஜனகனமன சொல்லி செல்லும்
குறு குறு பார்வைகள் சொல்லும் சேதி என்ன கடவுளும் குழம்புவான் இன்னும்
ஓஹோ குண்டு மல்லி குண்டு மல்லி
அதில் பட்டு பட்டு பட்டாம்பூச்சி ஆனாய்
தொட்டு தொட்டு குண்டு வைத்து போனாய்
எனக்குள் உன்னை தொலைத்து
நீ உனக்குள் என்னை தேடு
இரண்டு உயிர்கள் இருந்தால்
அதை காதல் என்று கூறு
வேணா வேணா விழுந்திடுவேனா
கண்கள் கண்டால் கவுந்திடுவேனா
ஒரு முறை சிரிக்கிறாய்
என் உயிரினை பறிக்கிறாய்
கண்கள் ரெண்டும் அணுகுண்டா
கத்தி உள்ள பூச்செண்டா
இன்பமான சிறை உண்டா
ஈர விழியில் இடம் உண்டா
கடவுள் பூமி வந்தால்
உன் கண்ணை பார்க்க வேண்டும்
மனிதன் பாவம் என்று
அவன் மறைந்து போக வேண்டும்




Udit Narayan, Sadhana Sargam - Vaseegara
Album Vaseegara
date of release
21-08-2019




Attention! Feel free to leave feedback.