A. R. Rahman feat. Hariharan & Madhushree - Wahji Wahji paroles de chanson

paroles de chanson Wahji Wahji - A. R. Rahman feat. Hariharan & Madhushree




ஆம்பல் ஆம்பல் மௌவல் மௌவல்
ஆம்பல் ஆம்பல் மௌவல் மௌவல்
பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்
புன்னகையோ மௌவல் மௌவல்
உன் பூவிழி பார்வை போதுமடி
என் பூங்கா இலைகளும் மலருமடி
உன் கால்கொலுசொலிகள் போதுமடி
பல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடி
வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி
வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி
அன்பால் பார்வையிடு அழகை சாவியிடு
உன் ஆண் வாசனை என்மேனியில் நீ பூசிவிடு
அடி நெட்டை நிலவே ரெட்டைத் திமிரே
நெஞ்சில் முட்டிக் கொல்லு
வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி
வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி
பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்
புன்னகையோ மௌவல் மௌவல்
ஒரு வெண்ணிலவை மணக்கும் மன்மதன் நான்
என் தேன் நிலவே ஒரு நிலவுடன்தான்
அவள் யாருமில்லை இதோ இதோ இவள்தான்
புன்னகை பேரரசே தேன்குளத்து பூவுக்குள் குளிப்பேனா
புன்னகை பேரரசே தேன்குளத்து பூவுக்குள் குளிப்பேனா
விடியும்வரை மார்புக்குள் இருப்பேனா
விழிகளுக்குள் சிறுதுயில் கொள்வேனா
பெண்களிடம் சொல்வது குறைவு
செய்வது அதிகம் செயல்புயல் நானடி
வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி
வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி
பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்
புன்னகையோ மௌவல் மௌவல்
பொன்வாக்கியமே வாய்வாத்தியமே
உன் வளைவுகளில் உள்ள நெளிவுகளில்
வந்து ஒளிந்துகொண்டேன் சுகம்சுகம் கண்டேன்
ஆனந்தவெறியில் நான் ஆடைகளில் பூமியை முடிந்துகொண்டேன்
விண்வெளியில் ஜதி சொல்லி ஆடி
வெண்ணிலவை சகதியும் ஆக்கிவிட்டேன்
அடடடா குமரியின் வரங்கள்
குழந்தையின் சிணுங்கல்
முரண்பாட்டு மூட்டை நீ
வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி
வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி
பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்
புன்னகையோ மௌவல் மௌவல்
உன் பூவிழி பார்வை போதுமடி
என் பூங்கா இலைகளும் மலருமடி
உன் கால்கொலுசொலிகள் போதுமடி
பல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடி
ஆம்பல் ஆம்பல் மௌவல் மௌவல்
ஆம்பல் ஆம்பல் மௌவல் மௌவல்



Writer(s): AR RAHMAN, P K MISHRA




Attention! N'hésitez pas à laisser des commentaires.