Darbuka Siva feat. Bombay Jayashri - Hey Nijame paroles de chanson

paroles de chanson Hey Nijame - Bombay Jayashri , Darbuka Siva




ஹேய் நிஜமே கலையாதே
கனவு நீ அல்ல
பிரிந்திட வழி ஆயிரம் முயலாதே
நெருங்கிட வழி ஒன்றை
நான் சொல்கிறேன்
இன்னும் கொஞ்சம் பக்கம் வந்தால்
நான் சொல்கிறேன் வா அருகே
சுழலாதிரு உலகே
மீனிகழுனர்வொன்றிலே வசிக்கின்றேன்
முடிக்கா முத்தங்களின்
மிச்சங்களில் வாழ
சுற்றாதிரு சற்றே
காதல் நொடி நீள
பிரிவெல்லாமே
இது போல் மாறாதா
தேயாத பூம்பாதை ஒன்றோடு நான்
ஓயாத காற்றாக என்னோடு நீ
நிற்காத பாட்டாக உன் காதில் நான்
வீழாத உற்சாக ஊற்றாக நீ
மாறாத இன்பத்து பாலாக நான்
தீராத தீக்காமம் ஒன்றாக நீ
தூங்காத உன் கண்ணின் கனவாக நான்
தூரத்தில் இருந்தாலும் பிரியாத நீ
வாசத்தின் வாசலில் தோரணம் நான்
வார்த்தைகள் தித்திக்கும் காரணம் நீ
யாசித்து நீ கேட்ட இரவாக நான்
யாருக்கும் தெரியாத உறவாக நீ



Writer(s): Madhan Karky Vairamuthu, Siva Darbuka



Attention! N'hésitez pas à laisser des commentaires.