S. P. Balasubrahmanyam feat. S. Janaki - Oru Naalum paroles de chanson

paroles de chanson Oru Naalum - S. Janaki , S. P. Balasubrahmanyam

கங்கணகணவென கிண்கிணி மணிகளும் ஒலிக்க ஒலிக்க
எங்கெங்கிலும் மங்களம் மங்களம் எனும் மொழி முழங்க முழங்க
ஒரு சுயம்வரம் நடக்கிறதே இது சுகம் தரும் சுயம்வரமே
ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
எனையாளும் எஜமானே எனையாளும் எஜமானே
எனையாளும் எஜமானே எனையாளும் எஜமானே
ஹா ஹா ஹா ஹா
ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
தனனனனனா தனனனனனா
தனனனனனா தனனனன னானானானானா
சுட்டுவிரல் நீ காட்டு சொன்னபடி ஆடுவேன்
உன்னடிமை நான் என்று கையெழுத்துப் போடுவேன்
உன்னுதிரம் போலே நான் பொன்னுடலில் ஓடுவேன்
உன்னுடலில் நான் ஓடி உள் அழகைத் தேடுவேன்
தோகை கொண்டு நின்றாடும் தேன்கரும்பு தேகம்
முந்தி வரும் தேன் வாங்கிப் பந்தி வைக்கும் நேரம்
அம்புகள் பட்டு நரம்புகள் சுட்டு வம்புகள் என்ன வரம்புகள் விட்டு
ஹா ஹா ஹா ஹா
ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
இணையான இளமானே துணையான இளமானே
இணையான இளமானே துணையான இளமானே
ஹா ஹா ஹா ஹா
ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
கட்டில் இடும் சூட்டோடு தொட்டில் கட்டு அன்னமே
முல்லைக் கொடி தரும் அந்தப் பிள்ளைக் கனி வேண்டுமே
உன்னை ஒரு சேய் போலே என் மடியில் தாங்கவா
என்னுடைய தாலாட்டில் கண்மயங்கித் தூங்கவா
ஆரீராரோ நீ பாட ஆசை உண்டு மானே
ஆறு ஏழு கேட்டாலும் பெற்றெடுப்பேன் நானே
முத்தினம் வரும் முத்து தினம் என்று
சித்திரம் வரும் விசித்திரம் என்று
ஹா ஹா ஹா ஹா
ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
இணையான இளமானே துணையான இளமானே
எனையாளும் எஜமானே எனையாளும் எஜமானே
ஹா ஹா ஹா ஹா

S. P. Balasubrahmanyam feat. S. Janaki - Ejjaman (Original Motion Picture Soundtrack)
Album Ejjaman (Original Motion Picture Soundtrack)
date de sortie
18-02-1993

Attention! N'hésitez pas à laisser des commentaires.