Mano feat. K. S. Chithra - Yaarum Vilaiyaadum - From "Nadodi Thendral " paroles de chanson

paroles de chanson Yaarum Vilaiyaadum - From "Nadodi Thendral " - K. S. Chithra , Mano



டௌ... டடன் டன் டடடட டௌ
டௌ... டடன் டன் டடடட டௌ
யாரும் விளையாடும் தோட்டம்
தினம்தோறும் ஆட்டம் பாடம்
போட்டாலும் பொறுத்து கொண்டு
பொன்னு தரும் சாமி இந்த மண்ணு நம்ம பூமி
பொன்னு தரும் சாமி இந்த மண்ணு நம்ம பூமி
கோபங்கள் வேண்டாம் கொஞ்சம் ஆறப்போடு
ஆரோடும் ஊரா பாத்து டேரா போடு
யாரும் விளையாடும் தோட்டம்
தினம்தோறும் ஆட்டம் பாடம்
போட்டாலும் பொறுத்து கொண்டு
பொன்னு தரும் சாமி இந்த மண்ணு நம்ம பூமி
பொன்னு தரும் சாமி இந்த மண்ணு நம்ம பூமி
கூடமும் மனிமாடமும் நல்ல வீடு உண்டு
தேடவும் பள்ளு பாடவும் பள்ளிக்கூடமுண்டு
பாசமும் நல்ல நேசமும் வந்து கூடும் இங்கு
பூசலும் சிறு ஏசலும் தினம் தோறும் உண்டு
அன்பில்லா ஊருக்குள்ள இன்பம் இல்ல
வம்பில்லா வாழ்க்கை என்றால் துன்பம் இல்ல
கோபங்கள் வேண்டாம் கொஞ்சம் ஆறப்போடு
ஆரோடும் ஊரா பாத்து டேரா போடு
ஆத்தி இது வாத்து கூட்டம்
ஆத்தி இது வாத்து கூட்டம்
பாத்தா இவ ஆளு மட்டம்
போட்டா ஒரு ஆட்டம் பாட்டம்
சொல்லுறத கேளு நீ வேற ஊற பாரு
நான் சொல்லுறத கேளு கொஞ்சம் வேற ஊற பாரு
டேராவ பாத்து போடு ஓலத்தோடு
வேறோரு போயி சேரு நேரத்தோடு
ஆத்தி இது வாத்து கூட்டம்
ஆத்தி இது வாத்து கூட்டம் பாத்தா இவ ஆளு மட்டம்
போட்டா ஒரு ஆட்டம் பாட்டம்
சொல்லுறத கேளு நீ வேற ஊற பாரு
நான் சொல்லுறத கேளு கொஞ்சம் வேற ஊற பாரு
டௌ... டடன் டன் டடடட டௌ
டௌ... டடன் டன் டடடட டௌ
ஆவியாகி போன நீரும் மேகமாச்சு
மேக நீரும் கீழ வந்து ஏரி ஆச்சு
ஆறு என்ன ஏரி என்ன நீரு ஒன்னு
மேடு என்ன காடு என்ன பூமி ஒன்னு
கடலுக்குள் சேரும் தண்ணி உப்பாகுது
சிப்பிக்குள் கூடும் தண்ணி முத்தாகுது
சேராத தாமர பூ தண்ணி போலே
மாறாது எங்க வாழ்வு வானம் போலே
யாரும் விளையாடும் தோட்டம்
தினம்தோறும் ஆட்டம் பாடம்
போட்டாலும் பொறுத்து கொண்டு
பொன்னு தரும் சாமி இந்த மண்ணு நம்ம பூமி
பொன்னு தரும் சாமி இந்த மண்ணு நம்ம பூமி




Mano feat. K. S. Chithra - Mano & Chithra - Tamil Hits, Vol. 1




Attention! N'hésitez pas à laisser des commentaires.