S. P. Balasubrahmanyam feat. Hariharan - Kuyilukku Ku Ku ( From Friends) paroles de chanson

paroles de chanson Kuyilukku Ku Ku ( From Friends) - S. P. Balasubrahmanyam feat. Hariharan

யே சிரிக்கும் கடல் அல சில முத்து சிதறுது யே யேயே யே யே
விரிக்கும் வலையில மனசெல்லாம் விரியுது யே யேயே யே யே
சோத்துக்கு பாடுபடும் எழைக்கொன்னும் இல்ல இல்ல
சொகமே ஏற்படுத்த பாடினா தொல்ல இல்ல
கைகளை கொட்டி கொட்டி சுத்தி சுத்தி கும்மியடிப்போம்
குயிலுக்கு கூ கூ கூ விட சொல்லிக்கொடுப்போம் அட ஆமா
மயிலுக்கு தை தை தாளங்கள் சொல்லிக்கொடுப்போம் அட ஆமா
நதி நடந்து நடை பழகி கடலுடன் கலந்தது இந்நேரம்
கடந்ததெல்லாம் மறந்துவிட்டு அலைகடல் இசையினில் விளையாடும்
நீரை பிரித்தாலும் வேராகிப்போகாது
இன்பம் கரை மீற இனி என்றும் குறையாது
குயிலுக்கு கூ கூ கூ விட சொல்லிக்கொடுப்போம் அட ஆமா
மயிலுக்கு தை தை தாளங்கள் சொல்லிக்கொடுப்போம் அட ஆமா
நிலவு வளரும் வளர்ந்து தளரும் அன்பில் எது தேய்பிறை
அன்புக்கொரு எல்லை இல்லை கண்ணம்மா
மலர்கள் உதிர கிளையில் குதிக்கும் குருவிக்கென்றும் விடுமுறை
கொள்ளை இன்பம் நட்பில் உண்டு கண்ணம்மா
வானில் திரண்ட மேகத்தில் மின்னல் வானை பிரிக்காது
எங்கள் இடையில் யார் வந்த போதும் நெஞ்சம் பிரியாது
துயர் போனது நேற்றோடு இனி என்றும் ஆனந்தம் கொண்டாடு
குயிலுக்கு கூ கூ கூ விட சொல்லிக்கொடுப்போம் அட ஆமா
மயிலுக்கு தை தை தாளங்கள் சொல்லிக்கொடுப்போம் அட ஆமா
அச்சுவெல்லம் பச்சரிசி சோறு
அச்சுவெல்லம் பச்சரிசி சோறு
கருப்பஞ்சாறு தேன் கலந்து பாடு
கருப்பஞ்சாறு தேன் கலந்து பாடு
ஆடி வரும் அம்மனோட தேறு
அம்மனுக்கு படையல் ஒன்னு போடு
ஊர் செழிக்க ஒசந்து போகும் பேரு
இதய வயலில் குளிர்ந்த காற்று இனிக்க இனிக்க வீசுதே
விண்ணை தொட ரெக்கை கொடு குயிலே
இரவு முழுதும் சிமிட்டும் விண்மீன் சிரிப்பு கதைகள் பேசுதே
பக்கம் வந்து என்னை தொடு முகிலே
ஜென்மம் நூறு என்றான போதும் சேர்ந்து பிறப்போமே
தலையில் வாணம் விழுகின்ற போதும் துயரம் மறப்போமே
துயர் போனது நேற்றோடு இனி என்றும் ஆனந்தம் கொண்டாடு
குயிலுக்கு கூ கூ கூ விட சொல்லிக்கொடுப்போம் அட ஆமா
மயிலுக்கு தை தை தாளங்கள் சொல்லிக்கொடுப்போம் அட ஆமா
நதி நடந்து நடை பழகி கடலுடன் கலந்தது இந்நேரம்
கடந்ததெல்லாம் மறந்துவிட்டு அலைகடல் இசையினில் விளையாடும்
நீரை பிரித்தாலும் வேராகிப்போகாது
இன்பம் கரை மீற இனி என்றும் குறையாது
குயிலுக்கு கூ கூ கூ விட சொல்லிக்கொடுப்போம் அட ஆமா
மயிலுக்கு தை தை தாளங்கள் சொல்லிக்கொடுப்போம் அட ஆமா
குயிலுக்கு கூ கூ கூ விட சொல்லிக்கொடுப்போம் அட ஆமா
மயிலுக்கு தை தை தாளங்கள் சொல்லிக்கொடுப்போம் அட ஆமா

Writer(s): palani bharathi

Attention! N'hésitez pas à laisser des commentaires.
//}