S.P. Balasubrahmanyam - Oruvan Oruvan (From "Muthu") paroles de chanson

paroles de chanson Oruvan Oruvan (From "Muthu") - S. P. Balasubrahmanyam

பாடல்: ஒருவன் ஒருவன் முதலாளி
பாடகர்: எஸ். பி . பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து
இசை அமைப்பாளர்: . ஆர் .ரஹ்மான்
படம்: முத்து
ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி

பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு பூப்பறிக்க கோடரி எதற்கு
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு ஆசை துறந்தால் அகிலம் உனக்கு
சைய்ய சைய்யார சைய்யார சைய்ய
சைய்ய சைய்யார சைய்யார சைய்ய
மண்ணின் மீது மனிதனுக்காசை மனிதன் மீது மண்ணுக்காசை
மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது இதை மனம்தான் உணர மறுக்கிறது
கையில் கொஞ்சம் காசு இருந்தால் நீதான் அதற்கு எஜமானன்
கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அதுதான் உனக்கு எஜமானன்
வாழ்வின் அர்த்தம் புரிந்துவிடு வாழ்க்கையை வாரிக் குடித்துவிடு
ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி
ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி
பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு பூப்பறிக்க கோடரி எதற்கு
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு ஆசை துறந்தால் அகிலம் உனக்கு
வானம் உனக்கு பூமியும் உனக்கு வறப்புகளோடு சண்டைகள் எதற்கு
வாழச் சொல்லுது இயற்கையடா வாழ்வில் துன்பம் செயற்கையடா
பறவைகள் என்னைப் பார்க்கும்போது நலமா நலமா என்கிறது
மொட்டுக்கள் மெல்லத் திறக்கும்போது முத்து முத்து என்கிறதே
இனிமை இனிமேல் போகாது முதுமை எனக்கு வாராது
ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி
ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி
பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு பூப்பறிக்க கோடரி எதற்கு
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு ஆசை துறந்தால் அகிலம் உனக்கு

Writer(s): Vairamuthu, A. R. Rahaman

Attention! N'hésitez pas à laisser des commentaires.