Sathyan - Unnai Vittu paroles de chanson

paroles de chanson Unnai Vittu - Sathyan




உன்னை விட்டு கொஞ்சம் விலகும் நேரம்
என்னை விட்டு உயிர் தானாய் போகும்
ஏதோ ஏதோ செய்யும் காதல் மாயம்
அன்பே கல்லாய் நின்றேன்
நெஞ்சம் துடித்தது காதல் கேட்டு
சுழல் தடுத்தது நேரம் பார்த்து
எந்தன் மனதினில் கண்ணீர் கூத்து
ஐயோ என்ன செய்வேன்
உன் கரம் பிடிக்க ஓர் தகுதி இல்லை
என் கனவுகள் கலையுதடி
உன் நிழல் அருகே என் உயிர் பிரிந்தால்
இஜ்ஜன்மம் கடைத்தே இருவடி
முதல் மழையில் நான் நனைந்து விட்டேன்
உன்னாலே இன்று குளிர் காய்ச்சல்
முதன் முதலாய் நான் அழுது விட்டேன்
என் உயிரில் இன்று பெரும் கூச்சல்
மழை புதுங்கிய நொடியில்
மரம் ஏன் சரிந்தது தலையில்
நான் எந்த கடவுளிடம் இதை நியாயம் கேட்பது
காதல் மாளிகையின் சாவி
தொலைத்துப்போகும் ஒரு பாவி
மீண்டும் மீண்டும் உயிர் தீண்டும் மாவலினை
என்ன செய்வதோ
புயல் அடிக்கும் பின் மழை அடிக்கும்
உன் நேசம் என் தலை துடைக்கும்
உயிர் கலக்கும் நம் இருவருக்கும்
இடையில் ஏன் இடி முழக்கும்
உனை நான் கொஞ்சம் முன்னால்
பார்க்கவில்லை என் இரு கண்ணால்
அது மட்டும் நடந்திருந்தால் இந்த சோகம் இல்லையே
காதல் பூக்கும் இந்த வேளை
காலம் சுடற்றி அது வாழை
தண்டவாளத்தினில் தூங்கும் வண்டு
இனி பூவை பார்க்குமா



Writer(s): Viveka, Ganesh Ragavendra



Attention! N'hésitez pas à laisser des commentaires.