Shankar Mahadevan - Paathum Paakkaama paroles de chanson

paroles de chanson Paathum Paakkaama - Shankar Mahadevan




பாத்தும் பாக்காம போகும் விழி பொய் சொல்லுமா
பட்டாம் பூச்சிமேல் பல்லக்கு இது நியாயமா
குமரி அழகுல குழந்த சிரிப்புல
சரிக்கி விழுந்தேனே எழ தோணல
ஆசைப்பட்ட பெண்ணே அடிமனசில் நின்னே
ஆணி அடிக்காத நீ
ஏணி வெச்சி ஏறி இல மனச பறிக்க
தடையும் போடாத நீ
என் விழியோரமா விளையாடி விளையாடி
வந்தாயே விதவிதமா
நான் ஆடி போனேனே பம்பரமா கண் மணியோரமா
தடுமாறி தடம் மாறி நின்றேனே சுகம்சுகமா
உன்ன அழகா படைச்சி எந்தன் கர்வம் ஒடச்சி
காதல் எனக்குள்ளே விதைச்சான்
பறவை போலே நான்தான் பறந்தேனே தன்னால
உன் சந்தையில பேரங்கள் பேசாமல்
ஒரு காதல் நான் வாங்க
வெலையும் சொல்லாம
தலையாட்டும் பெண்ணே
உன் நாய்க்குட்டி நான்
உன்னோடு உறவாட
வருவேனே வாலாட்டி
திருவிழா கூட்டமும் நீதான்
தொலைஞ்ச குழந்தையும் நான்தான்
என்ன உனக்குள்ளே தேடி
சுற்றும் ராட்டினம் நானே
உன்ன சுற்றி வருவேனே
ஆசைப்பட்ட பெண்ணே அடிமனசில் நின்னே
ஆணி அடிக்காத நீ
ஏணி வெச்சி ஏறி இல மனச பறிக்க
தடையும் போடாத நீ



Writer(s): J. Francis Kiruba


Attention! N'hésitez pas à laisser des commentaires.