A.R. Rahman & Haricharan - Manamaganin Sathiyam текст песни

Текст песни Manamaganin Sathiyam - A. R. Rahman , Haricharan




கண்ணே கனியே உன்னை கை விடமாட்டேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே
மாலை சூடிய காலை கதிரின் மேலே
சத்தியம் சத்தியம் இது சத்தியமே
ஒரு குழந்தை போலே
ஒரு வைரம் போலே
தூய்மையான என் சத்தியம் புனிதமானது
இப்பிறவியில் இன்னொரு பெண்ணை
சிந்தையிலும் தொடேன்
பிறிதோர் பக்கம்
மனம் சாயா பிரியம் காப்பேன்
செல்ல கொலுசின் சிணுங்கல்
அறிந்து சேவை செய்வேன்
நெற்றி பொட்டில் முத்தம் பதித்து
நித்தம் எழுவேன்
கை பொருள் யாவும் கரைந்தாலும்
கணக்கு கேளேன்
ஒவ்வொரு வாதம் முடியும் போதும்
உன்னிடம் தோர்ப்பேன்
கண்ணே கனியே
உன்னை கை விடமாட்டேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே
மாலை சூடிய காலை கதிரின் மேலே
சத்தியம் சத்தியம் இது சத்தியமே
அர்த்த ஜாம திருடன் போல அதிர்ந்து பேசேன்
காமம் தீரும் பொழுதிலும்
எந்தன் காதல் தீரேன்
மாத மலர்ச்சி மறையும் வயதில்
மார்பு கொடுப்பேன்
நோய் மடியோடு நீ வீழ்ந்தாள்
தாய் மடியாவேன்
சுவாசம் போல அருகில் இருந்து
சுகப்பட வைப்பேன்
உந்தன் உறவை எந்தன் உறவாய்
நெஞ்சில் சுமப்பேன்
உன் கனவுகள் நிஜமாக
என்னையே தருவேன்
உன் வாழ்வு மண்ணில் நீள
என் உயிர் தருவேன்
கண்ணே கனியே
உன்னை கை விடமாட்டேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே
மாலை சூடிய காலை கதிரின் மேலே
சத்தியம் சத்தியம் இது சத்தியமே
ஒரு குழந்தை போலே
ஒரு வைரம் போலே
தூய்மையான என் சத்தியம் புனிதமானது
தூய்மையான என் சத்தியம் புனிதமானது
தூய்மையான என் சத்தியம் புனிதமானது



Авторы: A R RAHMAN, VAIRAMUTHU



Внимание! Не стесняйтесь оставлять отзывы.