A.R. Rahman, Srinivas & Chinmayi - Idhayam текст песни

Текст песни Idhayam - Chinmayi Sripada , Srinivas




செந்தீ விழுந்த செம்பொற் பாறையில்
மந்தி உருட்டும் மயிலின் முட்டையாய் ...
நல்ல மரத்தின் நறுங்கிளை எழிந்து
வெள்ளச் சுழியில் விழுந்து
மலராய்
இதயம் நழுவி நழுவி
நகர்ந்து நகர்ந்து நகர்ந்து
போகுதே ஏனோ சொல்
ஏனோ ஏனோ சொல்
சொல் ஏனோ சொல்வாயோ
ஏனோ சொல் சொல்
ஏனோ சொல்வாயோ
இதயம் கரைகள் மறந்து
திசைகள் தொலைந்து
போகுதே ஏனோ சொல்
ஏனோ ஏனோ சொல் சொல்
ஏனோ சொல்வாயோ
பூப்பது மறந்தன கொடிகள்
புன்னகை மறந்தது மின்னல்
காய்ப்பது மறந்தது காடு
காவியம் மறந்தது ஏடு
பூப்பது மறந்தன கொடிகள்
புன்னகை மறந்தது மின்னல்
காய்ப்பது மறந்தது காடு
காவியம் மறந்தது ஏடு
ஏனோ ராணா ராணா
யானோ நின்னை மறக்கினேன்
நின்னை மறக்கினேன்
நின்னை மறக்கினேன்
இதயம் நழுவி நழுவி
நகர்ந்து நகர்ந்து நகர்ந்து
போகுதே ஏனோ சொல்
ஏனோ ஏனோ சொல்
சொல் ஏனோ சொல்வாயோ
ஏனோ சொல் சொல் ஏனோ
சொல்வாயோ
செந்தமிழ் பிரியும் சங்கம்
செங்கடல் பிரியும் அலைகள்
ஒலியைப் பிரியும் காற்று
உளியைப் பிரியும் சிற்பம்
செந்தமிழ் பிரியும் சங்கம்
செங்கடல் பிரியும் அலைகள்
ஒலியைப் பிரியும் காற்று
உளியைப் பிரியும் சிற்பம்
வாசத்துக்கேது சிறைவாசம்
யானோ நின்னைப்
பிரிகினேன் பிரிகினேன்
பிரிகினேன் யானோ நின்னைப்
பிரிகினேன் பிரிகினேன் பிரிகினேன்
சிறைகோட்டு பெரும்பயம் தூங்கி யாங்கு
என் உயிரோ சிறிதே காதலோ பெரிதே



Авторы: A R RAHMAN, VAIRAMUTHU



Внимание! Не стесняйтесь оставлять отзывы.