A. R. Rahman feat. A. R. Raihanah, Tipu & Nikhita Gandhi - Saarattu Vandiyila (From "Kaatru Veliyidai") текст песни

Текст песни Saarattu Vandiyila (From "Kaatru Veliyidai") - A. R. Rahman feat. A. R. Raihanah, Tipu & Nikhita Gandhi




சாரட்டு வண்டில சீரட்டொளியில
ஓரந்தெரிஞ்சது உம்முகம்
உள்ளம் கிள்ளும் அந்தக் கள்ளச் சிரிப்புல
மெல்லச் சிவந்தது எம்முகம்
சாரட்டு வண்டில சீரட்டொளியில
ஓரந்தெரிஞ்சது உம்முகம்
உள்ளம் கிள்ளும் அந்தக் கள்ளச் சிரிப்புல
மெல்லச் சிவந்தது எம்முகம்
அடி வெத்தல போட்ட உதட்ட எனக்கு
பத்திரம் பண்ணிக்குடு
நான் கொடுத்த கடன திருப்பிக் குடுக்க
சத்தியம் பண்ணிக்குடு
என் ரத்தம் சூடு கொள்ள பத்து நிமிஷம்
தான் ராசாத்தி
ஆணுக்கோ பத்து நிமிஷம்
பொண்ணுக்கோ அஞ்சு நிமிஷம்
பொதுவா சண்டித்தனம் பண்ணும் ஆம்பளய பொண்ணு
கிண்டிக் கெழெங்கெடுப்பா
சேலைக்கு சாயம் போகு மட்டும்
உன்ன நான் வெளுக்க வேணுமடி
பாடுபட்டு விடியும் பொழுது
வெளியில் சொல்ல பொய்கள் வேணுமடி
புதுப் பொண்ணே
அதுதாண்டி தமிழ்நாட்டுப் பாணி
சாரட்டு வண்டில சீரட்டொளியில
ஓரந்தெரிஞ்சது உம்முகம்
உள்ளம் கிள்ளும் அந்தக் கள்ளச் சிரிப்புல
மெல்லச் சிவந்தது எம்முகம்
சாரட்டு வண்டில சீரட்டொளியில
ஓரந்தெரிஞ்சது உம்முகம்
உள்ளம் கிள்ளும் அந்தக் கள்ளச் சிரிப்புல
மெல்லச் சிவந்தது எம்முகம்
வெக்கத்தயே கொழச்சு கொழச்சு
குங்குமம் பூசிக்கோடி
ஆசை உள்ள வேர்வைய போல்
வாசம் ஏதடி
பூங்கொடி வந்து தேன்குடி
அவன் கைகளில் உடையட்டும்
கன்னி கண்ணாடி
கத்தாழங் காட்டுக்குள் மத்தளம் கேக்குது
சித்தானை ரெண்டுக்கும் கொண்டாட்டம்
குத்தாலச் சாரலே முத்தான பன்னீரே
வித்தார கள்ளிக்கு துள்ளாட்டம்
அவ மன்மத காட்டுச் சந்தனம் எடுத்து
மார்பில் அப்பிக்கிட்டான்
இவ குரங்கு கழுத்தில்
குட்டியப் போல தோளில் ஓட்டிக்கிட்டா
இனி புத்தி கலங்கற முத்தம் கொடுத்திரு ராசாவே
பொண்ணுதான் ரத்தினக் கட்டி ஹா
மாப்பிள்ள வெத்தலப் பொட்டி
எடுத்து ரத்தினக் கட்டிய வெத்தல பொட்டியில்
மூடச் சொல்லுங்கடி
மொதலில் மால மாத்துங்கடி
பிறகு பால மாத்துங்கடி
கட்டில் விட்டு காலையிலே கசங்கி வந்தா
சேலை மாத்துங்கடி
மகாராணி அதுதாண்டி தமிழ்நாட்டுப் பாணி
கத்தாழங் காட்டுக்குள் மத்தளம் கேக்குது
சித்தானை ரெண்டுக்கும் கொண்டாட்டம்
குத்தாலச் சாரலே முத்தான பன்னீரே
வித்தார கள்ளிக்கு துள்ளாட்டம்
கத்தாழங் காட்டுக்குள் மத்தளம் கேக்குது
சித்தானை ரெண்டுக்கும் கொண்டாட்டம்
குத்தாலச் சாரலே முத்தான பன்னீரே
வித்தார கள்ளிக்கு துள்ளாட்டம்
புதுப் பொண்ணே
அதுதாண்டி தமிழ்நாட்டுப் பாணி
குத்தாலச் சாரலே முத்தான பன்னீரே
வித்தார கள்ளிக்கு துள்ளாட்டம்
புதுப் பொண்ணே
அதுதாண்டி தமிழ்நாட்டுப் பாணி
புதுப் பொண்ணே
அதுதாண்டி தமிழ்நாட்டுப் பாணி



Авторы: A R RAHMAN, VAIRAMUTHU




Внимание! Не стесняйтесь оставлять отзывы.