Текст песни Nilave Nilave - Hariharan
நா ந ந ந
நா ந நா ந
நா ந ந ந
நா ந நா ந
நிலவே நிலவே தாளம் போடு
பாட்டொண்ணு பாட போறேன்
மலரே மலரே ராகம் தேடி
பாட்டொண்ணு பாட போறேன்
நட்சத்திரமே கூட வா கூட வா
அக்கா மகள பாட வா பாட வா
நான் பாடும் ராகம் அவள் அல்லவா ஆ ஆ
நிலவே நிலவே தாளம் போடு
பாட்டொண்ணு பாட போறேன்
மலரே மலரே ராகம் தேடி
பாட்டொண்ணு பாட போறேன்
கோலாரு தங்கம் இல்லாம
அவ மேனி ஜொலிக்குமடி
கோஹினூர் வைரம் இல்லாம
அவ மூக்கு ஜொலிக்குமடி
கோலாரு தங்கம் இல்லாம
அவ மேனி ஜொலிக்குமடி
கோஹினூர் வைரம் இல்லாம
அவ மூக்கு ஜொலிக்குமடி
என் வீட்டு தோட்டத்திலே
மல்லிகைப்பூ செடி ஒண்ணு வெச்சிருக்கேன்
என்னோட ஆசையைத்தான்
பூத்திருக்கும் பூக்களில் கொட்டி வெச்சேன்
ஆனியில நல்ல நாள் குறிச்சி
ஆவணியில் ஒரு பாக்கு வச்சி
என் அக்கா மக அவளத்தான்
கை புடிக்கப்போறேன்
நிலவே நிலவே தாளம் போடு
பாட்டொண்ணு பாட போறேன்
மலரே மலரே ராகம் தேடி
பாட்டொண்ணு பாட போறேன்
ஆகாயம் ரெண்டு பட்டாலும்
அவ மூச்சில் கலந்திருப்பேன்
அவ மேலே மழை விழுந்தாலும்
அடிபட்டு நான் துடிப்பேன்
ஆகாயம் ரெண்டு பட்டாலும்
அவ மூச்சில் கலந்திருப்பேன்
அவ மேலே மழை விழுந்தாலும்
அடிபட்டு நான் துடிப்பேன்
வாழ்விருக்கும் காலம் எல்லாம்
அவளுக்கு நிழலா நான் இருப்பேன்
அவள் நடக்கும் பாதையெல்லாம்
அனுதினம் பூவால் நான் துடைப்பேன்
கண்ணுக்குள்ளே கோயில் கட்டி வைப்பேன்
கண்மணிய அதில் விட்டு வைப்பேன்
அவ கால் கொலுசா நான் இருக்க
ஜென்மம் ஏழு எடுப்பேன்
நிலவே நிலவே தாளம் போடு
பாட்டொண்ணு பாட போறேன்
மலரே மலரே ராகம் தேடி
பாட்டொண்ணு பாட போறேன்
நட்சத்திரமே கூட வா கூட வா
அக்கா மகள பாட வா பாட வா
நான் பாடும் ராகம் அவள் அல்லவா ஆ ஆ
ல ல லா லே லா லே லா லா
லா லா லா
ல ல லா லா லா லா லா

Внимание! Не стесняйтесь оставлять отзывы.