Javed Ali feat. Yuvan Shankar Raja & Sowmya Raoh - Aedho Saigirai (From "Vaamanan") текст песни

Текст песни Aedho Saigirai (From "Vaamanan") - Yuvan Shankar Raja , Javed Ali , Sowmya Raoh




ஏதோ செய்கிறாய் என்னை ஏதோ செய்கிறாய்
என்னை என்னிடம் நீ அறிமுகம் செய்கிறாய்
ஏதோ செய்கிறாய் என்னை ஏதோ செய்கிறாய்
என்னை என்னிடம் நீ அறிமுகம் செய்கிறாய்
உன்னோடு பேசினால்
உள் நெஞ்சில் மின்னல் தோன்றுதே
கண்ணாடி பார்க்கையில்
என் கண்கள் உன்னை காட்டுதே
பெண்ணே இது கனவா நிஜமா உன்னை கேட்கின்றேன்
அன்பே இந்த நிமிடம் நெஞ்சுக்குள் இனிக்கிறதே
அடடா இந்த நெருக்கம் மயக்கமாய் இருக்கிறதே
உன்னால் இந்த உலகம் யாவுமே புதிதாய் தெரிகிறதே
பெண்ணே எந்தன் கடிகாரம்
எந்தன் பேச்சை கேட்கவில்லை
உன்னைக் கண்ட நொடியோடு நின்றதடி ஓடவில்லை
இதுவரை யாரிடமும் என் மனது சாயவில்லை
என்ன ஒரு மாயம் செய்தாய் என்னிடத்தில் நானுமில்லை
என்ன இது என்ன இது என் நிழலை காணவில்லை
உந்தன் பின்பு வந்ததடி இன்னும் அது திரும்பவில்லை
எங்கே என கேட்டேன் உன் காலடி காட்டுதடி
அன்பே இந்த நிமிடம் நெஞ்சுக்குள் இனிக்கிறதே
அடடா இந்த நெருக்கம் மயக்கமாய் இருக்கிறதே
உன்னால் இந்த உலகம் யாவுமே புதிதாய் தெரிகிறதே
காதல் நெஞ்சம் பேசிக்கொள்ள
வார்த்தையேதும் தேவையில்லை
மனதில் உள்ள ஆசை சொல்ல
மௌனம் போல மொழி இல்லை
இன்றுவரை என் உயிரை இப்படி நான் வாழ்ந்ததில்லை
புத்தம் புது தோற்றமிது வேறெதுவும் தோன்றவில்லை
நேற்றுவரை வானிலையில் எந்த ஒரு மாற்றமில்லை
இன்று எந்தன் வாசலோடு கண்டுகொண்டேன் வானவில்லை
ஒரே ஒரு நாளில் முழு வாழ்க்கை வாழ்ந்தேனே
அன்பே இந்த நிமிடம் நெஞ்சுக்குள் இனிக்கிறதே
அடடா இந்த நெருக்கம் மயக்கமாய் இருக்கிறதே
உன்னால் இந்த உலகம் யாவுமே புதிதாய் தெரிகிறதே
ஏதோ செய்கிறாய் என்னை ஏதோ செய்கிறாய்
என்னை என்னிடம் நீ அறிமுகம் செய்கிறாய்
ஏதோ செய்கிறாய் என்னை ஏதோ செய்கிறாய்
என்னை என்னிடம் நீ அறிமுகம் செய்கிறாய்



Авторы: YUVAN SHANKAR RAJA, JAVED ALI, NA MUTHUKUMAR, SOWMYA RAO


Javed Ali feat. Yuvan Shankar Raja & Sowmya Raoh - Sounds of Madras: Yuvanshankar Raja
Альбом Sounds of Madras: Yuvanshankar Raja
дата релиза
06-11-2015




Внимание! Не стесняйтесь оставлять отзывы.