S P Balasubrahmanyam - K S Chitra - Solaigal Ellaam Pookalai Thoova текст песни

Текст песни Solaigal Ellaam Pookalai Thoova - S P Balasubrahmanyam - K S Chitra




ஆண்: சோலைகள் எல்லாம் பூக்களைத் தூவ
சுகம் சுகம் ஆ...
குயில்களின் கூட்டம் பாக்களைப் பாட
இதம் இதம் ஆ...
காதல் ஊர்வலம் இங்கே...
கன்னி மாதுளம் இங்கே...
சோலைகள் எல்லாம் பூக்களைத் தூவ
சுகம் சுகம் ஆ.
குயில்களின் கூட்டம் பாக்களைப் பாட
இதம் இதம் ஆ...
பெண்: காதல் ஊர்வலம் இங்கே...
கன்னி மாதுளம் இங்கே...
கோரஸ்: துதுருரு துதுருரு ருருரு
ஆண்: விழி எனும் அருவியில்...
நனைகிறேன்... குளிர்கிறேன்.
பெண்: கவி என்னும் நதியிலே...
குதிக்கிறேன்... குளிக்கிறேன்.
ஆண்: மரகத வீணை உன் சிரிப்பிலே (பெ: சிரிப்பு)
மயக்கிடும் ராகம் கேட்கிறேன்
பெ: மன்னவன் உந்தன் அணைப்பிலே
மான் என நானும் துவள்கிறேன்
ஆண்: வாழை இலை போல நீ ஜொலிக்கிறாய்.
பெண்: காலை விருந்துக்கு என்னை அழைக்கிறாய்.
ஆண்: காதல் ஊர்வலம் இங்கே
பெண்: கன்னி மாதுளம் இங்கே
ஆண்: அஹ ஹா ஹா...
ஆண்: காதலி அருகிலே. இருப்பதே... ஆனந்தம்
பெண்: காதலன் மடியிலே.கிடப்பதே பரவசம்.
ஆண்: நட்சத்திரம் கண்ணில் சிரிக்குதா ஹாஹா.
மின்னி மின்னி என்னை பறிக்குதா
பெண்: புத்தகம் போல் தமிழை சுமக்கிறாய்
பக்கம் வந்து புரட்ட அழைக்கிறாய்
ஆண்: நீ வெட்கத்தில் படிக்க மறுக்கிறாய்.
பெண்: நீ சொர்கத்தை மிஞ்ச நினைக்கிறாய்...
ஆண்: காதல் ஊர்வலம் இங்கே
ததத்தா ததத துதுத்து.
பெண்: கன்னி மாதுளம் இங்கே
தரத்தா தரர தரதத்தா.
ஆண்: சோலைகள் எல்லாம் பூக்களைத் தூவ
சுகம் சுகம் ஆ.
பெண்: குயில்களின் கூட்டம் பாக்களைப் பாட
இதம் இதம் ஆ.
ஆண்: காதல் ஊர்வலம் இங்கே.
பெண்: பப்பா பப்பா.
கன்னி மாதுளம் இங்கே
ஆண்: ரர ரர ருரு.ரு...
அன்பு கிருஷ்ணா



Авторы: Rajendran T



Внимание! Не стесняйтесь оставлять отзывы.