S. P. Balasubrahmanyam feat. Sadhana Sargam - Oor Oora Pogira текст песни

Текст песни Oor Oora Pogira - S. P. Balasubrahmanyam , Sadhana Sargam



ஊர் ஊரா போகிற மேகக் கூட்டமே
என் பங்கிளி போக கண்டீரோ
ஊருக்கே விளக்கேற்றும் சூரியரே
என் தாமரைப் பூவை கண்டீரோ
போன திசைப் புரியலையே
பொசுங்குதடி என் மனசு
புங்கமர கிளைத் தொங்க
தூண்டுதடி என் உசிரு
நெருப்பாற்றில் குளிப்பாட்டி போனாயே நீ
ஊர் ஊரா போகிற மேகக் கூட்டமே
என் பங்கிளி போக கண்டீரோ
பட்டாப் போட்டு என்னைத் தானே
பதிவாக்கி வெச்சாலே
பாதியிலே வீதி நிறுத்தவா
சிக்கி முக்கி கண்ணால் தானே
தீயைப் பத்த வெச்சாலே
தீயில் என்னை வாட்டி எடுக்கவா ...ஆஆ.ஆஆஆ
அவ நாகப்பாம்பா பாய்ஞ்சிருஞ்சா
நினைவு தப்பி சாய்ஞ்சிருப்பேன்
அவ காதல் பாம்பா பாய்ஞ்சதினால்
சிறுக சிறுக சாகிறேனே
கண்ணம்மா மனம் கல்லாமா
பதில் நீ கூறமா
செக்கு இழுக்கும் மாட்டைப் போலே
என்னைச் சுத்தி வந்தாயே
செக்கில் என்னை ஆட்டிப்பார்ப்பதேன்
எறும்ப கொன்னாக்கூட பாவம் என்று சொன்னாயே
என்னைக் கொன்னு மண்ணில் புதைப்பதேன்.ஏஏஏஏ
என் நெஞ்சினில் வாளை வீசியிருந்தால்
வீர மரணம் கிடைச்சிருக்கும். நீ
முதுகில வாளை வீசியதால்
மானம் இழந்து சாகிறனே
நியாயமா இந்த காயம் தான். ஆஆஆறாதமா
ஊர் ஊரா போகிற மேகக் கூட்டமே
என் பங்கிளி போக கண்டீரோ
ஊருக்கே விளக்கேற்றும் சூரியரே
என் தாமரைப் பூவை கண்டீரோ
போன திசைப் புரியலையே
பொசுங்குதடி என் மனசு
புங்கமர கிளைத் தொங்க
தூண்டுதடி என் உசிரு
நெருப்பாற்றில் குளிப்பாட்டி போனாயே நீ



Авторы: Deva


S. P. Balasubrahmanyam feat. Sadhana Sargam - Chokkathangam (Original Motion Picture Soundtrack)
Альбом Chokkathangam (Original Motion Picture Soundtrack)
дата релиза
14-09-2002



Внимание! Не стесняйтесь оставлять отзывы.