S.P. Balasubrahmanyam - Azhagu Nila текст песни

Текст песни Azhagu Nila - S. P. Balasubrahmanyam



என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர் கொட்டிய அழகு
இன்றெந்தன் கை சேர்ந்ததே!
சின்ன அழகு சித்திர அழகு
சிறு நெஞ்சை கொத்திய அழகு
இன்றெந்தன் தோள் சாய்ந்ததே!!
எந்தன் உள்ளங்கையில் அவள் உயிரை வைத்தாள்
ஒரே சொல்லில் மனசை தைத்தாள்
சுட்டும் விழிப்பார்வையில் சுகம் வைத்தாள்!!!
நான் காதலின் கடலில் விழுந்துவிட்டேன்
நீ கரமொன்று கொடுத்தாய் எழுந்துவிட்டேன்!!!!
என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர் கொட்டிய அழகு
இன்றெந்தன் கை சேர்ந்ததே!!!!!
(இசை)
அன்பே உன் ஒற்றைப்பார்வை அதைத்தானே யாசித்தேன்
கிடையாதென்றால் கிளியே என் உயிர்ப்போக யோசித்தேன்!
நான்காண்டு தூக்கம் கெட்டு இன்றுன்னைச் சந்தித்தேன்
காற்றும் கடலும் நிலமும் அடித் தீக்கூட தித்தித்தேன்!!
மாணிக்கத் தேரே உனை மலர் கொண்டு பூசித்தேன்
என்னை நான் கிள்ளி இது நிஜம்தானா சோதித்தேன்!!!
இது போதுமே இது போதுமே இனி என்கால்கள் வான்போகுமே!!!!
என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர் கொட்டிய அழகு
இன்றெந்தன் கை சேர்ந்ததே!!!!!
(இசை)
நான் கொண்ட ஆசை எல்லாம் நான்காண்டு ஆசைதான்
உறங்கும்போது ஒலிக்கும் அடி உன் கொலுசின் ஓசைதான்!
நீ வீசும் பார்வை இல்லை நெருப்பாச்சு நெஞ்சம்தான்
வலியின் கொடுமை மொழிய அடி தமிழ் வார்த்தை கொஞ்சம்தான்!!
இன்றேதான் பெண்ணே உன் முழுப்பார்வை நான் கண்டேன்
கை தொட்ட நேரம் என்முதல் மோட்சம் நான் கொண்டேன்
மகராணியே மலர்வாணியே இனி என் ஆவி உன் ஆவியே!!!
என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர் கொட்டிய அழகு
இன்றெந்தன் கை சேர்ந்ததே!
சின்ன அழகு சித்திர அழகு
சிறு நெஞ்சை கொத்திய அழகு
இன்றெந்தன் தோள் சாய்ந்ததே!!
எந்தன் உள்ளங்கையில் அவள் உயிரை வைத்தாள்
ஒரே சொல்லில் மனசை தைத்தாள்
சுட்டும் விழிப்பார்வையில் சுகம் வைத்தாள்!!!
நான் காதலின் கடலில் விழுந்துவிட்டேன்
நீ கரமொன்று கொடுத்தாய் எழுந்துவிட்டேன்!!!!
என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர் கொட்டிய அழகு
இன்றெந்தன் கை சேர்ந்ததே!!!!!
Best love feeling song this lyrics work



Авторы: Amaren Premgi


S.P. Balasubrahmanyam - Gnabhagam Varuthe (Original Motion Picture Soundtrack)
Альбом Gnabhagam Varuthe (Original Motion Picture Soundtrack)
дата релиза
06-08-2013




Внимание! Не стесняйтесь оставлять отзывы.