Sid Sriram - Unkoodave Porakkanum (Brother’s Version) текст песни

Текст песни Unkoodave Porakkanum (Brother’s Version) - Sid Sriram




உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே
உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும் எப்போதுமே
என் வாழ்க்க வரமாக
அட நீயும் பொறந்தாயே
என் உயிரே உறவாக
என் நெஞ்சில் கரைஞ்சாயே
பசி தூக்கத்த மறந்து நீயும்
அடி பாசத்த பொழிஞ்சாயே
தெனம் உன் முகம் பார்த்து பூக்கும்
புது விடியலும் தந்தாயே
நீ எனக்கு சாமி இந்த பூமி
அட எல்லாம் நீ தானே
உன் சிரிப்பு போதும் நீ கேட்டா
என் உசுர தாரேனே
உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே
உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும் எப்போதுமே
உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே
உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும் எப்போதுமே
அஞ்சு விரல்கள கோர்த்து நாம
பத்து விரலா ஆனோம்
மணகோலத்தில் பார்த்தா
அந்த சின்ன பொண்ண காணோம்
சில நாளில் நீ என் தாயே
சில நாளில் நீ என் சேயே
நீ மடிமேல் சாயும்போது
அந்த வானம் விரிக்கும் பாயே
எப்போதுமே என்கூடத்தான்
என்று நினைச்சேன்
இப்போ நீயோ போகும் போது
செத்து பொழச்சேன்
நீதானே கொலசாமி
ஒரு வரமும் தாயேன்
மகளாக பொறப்பேன்னு
நீ சொல்லி போயேன்
உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே
உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும் எப்போதுமே
உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே
உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும் எப்போதுமே



Авторы: Gkb, Immanuel Vasanth Dinakaran



Внимание! Не стесняйтесь оставлять отзывы.