Srinivas feat. Sujatha - Oru Poiyavathu (From "Jodi") текст песни

Текст песни Oru Poiyavathu (From "Jodi") - Sujatha , Srinivas




ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதலன் நான் தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதலன் நான் தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
பூக்களில் உன்னால் சத்தம்
அடி மௌனத்தில் உன்னால் யுத்தம்
இதைத் தாங்குமா என் நெஞ்சம்
இதைத் தாங்குமா என் நெஞ்சம்
உண்மையும் பொய்மையும் பக்கம்பக்கம்தான்
ரொம்பப் பக்கம்பக்கம்தான்
பார்த்தால் ரெண்டும் வேறுதான்
பாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்றுதான்
பார்க்கும் கண்கள் ஒன்றுதான் உண்டால்
ரெண்டும் வேறுதான்
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதலன் நான் தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
இரவினைத் திரட்டி
இரவினைத் திரட்டி கண்மணியின் குழல் செய்தானோ
கண்மணியின் குழல் செய்தானோ
நிலவின் ஒளி எடுத்துக் கண்கள் செய்தானோ
விண்மீன் விண்மீன் கொண்டு
விரலின் நகம் சமைத்து
மின்னலின் கீற்றுகள் கொண்டு
கைரேகை செய்தானோ
வாடைக் காற்று பட்டு
வயதுக்கு வந்த பூக்கள் கொண்டுத்
தங்கம் தங்கம் பூசித் தோள் செய்தானோ
ஆனால் பெண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ
காதல் கண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நான் தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
நிலவினை எனக்கு அருகில் காட்டியது நீதானே
அருகில் காட்டியது நீதானே
மலரின் முகவரிகள் சொன்னது நீதானே
காற்று பூமி வானம் காதல் பேசும் மேகம்
அறிமுகம் செய்தது யார் யார் என் அன்பே நீதானே
கங்கை கங்கை ஆற்றைக்
கவிதைகள் கொண்டு தரும் காவிரி ஊற்றைத்
தன்னில் கையில் தந்தவள் நீதானே
ஆனால் உயிரே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ
காதல் நீரே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நான் தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நான் தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
பூக்களில் உன்னால் சத்தம்
அட மௌனத்தில் உன்னால் யுத்தம்
இதைத் தாங்குமா என் நெஞ்சம்
தாங்குமா என் நெஞ்சம்



Авторы: a. r. rahman



Внимание! Не стесняйтесь оставлять отзывы.