Srinivas feat. Timmy - Ram Bum Bum (From "Jodi") текст песни

Текст песни Ram Bum Bum (From "Jodi") - Sreenivas & Timmy



கை தட்டி தட்டி அழைத்தாளே
என் மனதை தொட்டு தொட்டு திறந்தாளே
என் உயிரை மெல்லத் துளைத்து நுழைந்தாளே
ஜீவன் கலந்தாளே அந்த தேன்குயிலே
தரரம்பம் தரரம்பம் தரரம்பம்
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்
பெண் எப்போதும் சுகமான துன்பம்
பொன் வானெங்கும் அவளின் பிம்பம்
ஐந்து நிமிடங்கள் அவளோடு வாழ்ந்தால்
வாழ்வு மரணத்தை வெல்லும்
தரரம்பம் தரரம்பம் தரரம்பம்
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்
ரத்தினத்து தேரானாள் என் மனசுக்குள்
சத்தமிடும் பூவானாள்
என் பருவத்தை பயிர் செய்யும் நீரானாள்
என் நெஞ்சக் குளத்தில் பொன் கல்லை எறிந்தாள்
அலையடங்குமுன் நெஞ்சத்தில் குதித்தாள்
விழியால் நெஞ்சுடைத்து விட்டாள்
ஸ்பரிசங்களால் பின் இணைத்துவிட்டாள்
தரரம்பம் தரரம்பம் தரரம்பம்
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்
பெண் எப்போதும் சுகமான துன்பம்
பொன் வானெங்கும் அவளின் பிம்பம்
ஐந்து நிமிடங்கள் அவளோடு வாழ்ந்தால்
வாழ்வு மரணத்தை வெல்லும்
தரரம்பம் தரரம்பம் தரரம்பம்
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்
தரரம்பம் தரரம்பம் தரரம்பம்
தர ரம்பம் தர ரம்பம் பம்பம்
தரரம்பம் தரரம்பம் தரரம்பம்
தர ரம்பம் தர ரம்பம் பம்பம்
பால்வண்ண நிலவெடுத்து பாற்கடலில்
பலமுறை சலவை செய்து
பெண்ணுருவாய் பிறந்தவள் அவள்தானோ
என் கவிதைகளில் கண்மலர்ந்தவளோ
என் மௌனங்களை மொழிபெயர்த்தவளோ
அழகை தத்தெடுத்தவளோ
என்னுயிர் மலரை கத்தரித்தவளோ
தரரம்பம் தரரம்பம் தரரம்பம்
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்
பெண் எப்போதும் சுகமான துன்பம்
பொன் வானெங்கும் அவளின் பிம்பம்
ஐந்து நிமிடங்கள் அவளோடு வாழ்ந்தால்
வாழ்வு மரணத்தை வெல்லும்
தரரம்பம் தரரம்பம் தரரம்பம்
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்



Авторы: a. r. rahman


Srinivas feat. Timmy - Hits of A.R.Rahman Nenjame
Альбом Hits of A.R.Rahman Nenjame
дата релиза
25-12-2013



Внимание! Не стесняйтесь оставлять отзывы.