Sadhana Sargam & Sujatha - Kokkorakko (From "Gilli") текст песни

Текст песни Kokkorakko (From "Gilli") - Sadhana Sargam , Sujatha



தூம் ஷாக் தூம் தூம் தூம் ஷாக்
தூம் ஷாக் தூம் தூம் தூம் ஷாக்
தூம் ஷாக் தூம் தூம் தூம் ஷாக்
தூம் ஷாக் தூம் தூம் தூம் ஷாக்
கொக்கர கொக்கரக்கோ விடிய கொக்கரக்கோ
இருந்த இருட்டெல்லாம் இனி மேலே கொக்கரக்கோ
கொக்கர கொக்கரக்கோ சேவல் கொக்கரக்கோ
சேவல் கூவக்குள்ளே வெட கோழி கொக்கரக்கோ
சங்கு சக்கரம் போலே மனசு சுத்துர வேளை
ஸுராங்கனிக்கா மாலு கண்ணா வா
ஆதோ பாரு வானம்
துனி துவைக்குது மேகம்
வெலகி போகுது சோகம் நீ வா
கொக்கர கொக்கரக்கோ விடிய கொக்கரக்கோ
இருந்த இருட்டெல்லாம் இனி மேலே கொக்கரக்கோ
வெள்ளிமணி கொலுசுக்குள்ளே துள்ளுகிற மனசுக்குள்ளே
சந்தோசம் நிலைச்சிருக்க சாமிகிட்ட கேட்டிருக்கேன்
தூம் ஷாக் தூம் தூம் தூம் ஷாக்
எல்லோரும் அருகிருக்க பொல்லாப்பு விலகிருக்க
அன்பான உங்ககிட்ட ஆண்டவனை பாத்திருக்கேன்
எண்ணம் இருந்தா எதுவும் நடக்கும் தன்னாலே
நீ துனிஞ்சா உலகம் உனக்கு பின்னாலே
குத்துவிளக்கா சிரிச்சா சிரிச்சா தப்பேது
கொள்ளையடிச்சான் மனச மனச இப்போது
நம்ம பக்கம் காத்து வீசுரத பாத்து
நல்லவங்கள சேர்த்து நீ போடு தினம் கூத்து
தூம் ஷாக் தூம் ஷாக் தூம் ஷாக் தூம் ஷாக்
கொக்கர கொக்கரக்கோ விடிய கொக்கரக்கோ
இருந்த இருட்டெல்லாம் இனி மேலே கொக்கரக்கோ
கந்தனுக்கு வள்ளிய போல கண்ணனுக்கு ராதைய போல
ஆசைகொண்ட உயிருகெல்லாம் துனையிருக்கு பூமியிலே
தூம் ஷாக் தூம் தூம் தூம் ஷாக்
கண்ணுக்குள்ள கனவிருக்க நெஞ்சுக்குள்ள நெனப்பிருக்க
யாருக்குள்ள யாரு இருக்கா தெரிஞ்சவங்க யாருமில்லை
ரெக்கை கட்டி பறக்கும் பறக்கும் வெள்ளாடு
வெக்க பட்டு மறைக்கும் மறைக்கும் நெஞ்சோடு
ஹேய் சிட்டுகுருவி சிரிக்கும் சிரிக்கும் கண்ணோடு
கொட்டும் அருவி குதிக்கும் குதிக்கும் என்னோடு
சிட்டான் சிட்டாஞ் சினுக்கு இப்ப உள்ளதெல்லாம் நமக்கு
கெட்டத தான் ஒதுக்கு இனி நம்ம கிட்ட கெழக்கு
கொக்கர கொக்கரக்கோ விடிய கொக்கரக்கோ
இருந்த இருட்டெல்லாம் இனி மேலே கொக்கரக்கோ
கொக்கர கொக்கரக்கோ சேவல் கொக்கரக்கோ
சேவல் கூவக்குள்ளே வெட கோழி கொக்கரக்கோ
சங்கு சக்கரம் போலே மனசு சுத்துர வேளை
ஸுராங்கனிக்கா மாலு கண்ணா வா
ஆதோ பாரு வானம்
துனி துவைக்குது மேகம்
வெலகி போகுது சோகம் நீ வா
கொக்கர கொக்கரக்கோ விடிய கொக்கரக்கோ
இருந்த இருட்டெல்லாம் இனி மேலே கொக்கரக்கோ
கொக்கர கொக்கரக்கோ சேவல் கொக்கரக்கோ
சேவல் கூவக்குள்ளே வெட கோழி கொக்கரக்கோ



Авторы: yugabharathi


Внимание! Не стесняйтесь оставлять отзывы.