Yuvan Shankar Raja,Sadhana Sargam - Manmadhane Nee текст песни

Текст песни Manmadhane Nee - Sadhana Sargam , Yuvan Shankar Raja




மன்மதனே நீ கலைஞணா
மன்மதனே நீ கவிஞணா
மன்மதனே நீ காதலனா
மன்மதனே நீ காவலனா
என்னை உனக்குள் தொலைத்தேன்
ஏனோ தெரியலை
உன்னை கண்ட நொடி ஏனோ இன்னும் நகரல
உந்தன் ரசிகை நானும் உனக்கேன் புரியவில்லை
எத்தனை ஆண்களை கடந்து வந்தேன்
எவனையும் பிடிக்கவில்லை
இருபது வருடம் உன்னைப்போல் எவனும்
என்னையும் மயக்கவில்லை
எத்தனை ஆண்களை கடந்து வந்தேன்
எவனையும் பிடிக்கவில்லை
இருபது வருடம் உன்னைப்போல் எவனும்
என்னையும் மயக்கவில்லை
மன்மதனே நீ கலைஞணா
மன்மதனே நீ கவிஞணா
மன்மதனே நீ காதலனா
மன்மதனே நீ காவலனா
நானும் ஓர் பெண் என பிறந்த பலனை
இன்றே தான் அடைந்தேன்
உன்னை நான் பார்த்த பின்
ஆண்கள் வார்கத்தை நானும் மதித்தேன்
எந்தன் நெஞ்சில் ஊஞ்சல் கட்டி
ஆடிக் கொண்டே இருக்கிறாய்
எனக்குள் புகுந்து எங்கோ நீயும்
ஓடிக்கொண்டே இருக்கிறாய்
அழகாய் நானும் மாறுகிறேன்
அறிவாய் நானும் பேசுகிறேன்
சுகமாய் நானும் மலறுகிறேன்
உனக்கேதும் தெரிகிறதா?
ஒரு முறை பார்த்தால் பல முறை இனிக்கிறாய்
என்ன விசித்திரமோ
நண்பனே எனக்கு காதலன் ஆனால்
அது தான் ஸரித்திரமோ
ஒரு முறை பார்த்தால் பல முறை இனிக்கிறாய்
என்ன விசித்திரமோ
நண்பனே எனக்கு காதலன் ஆனால்
அது தான் ஸரித்திரமோ
மன்மதனே உன்னை பார்க்கிறேன்
மன்மதனே உன்னை ரசிக்கிறேன்
மன்மதனே உன்னை வாசிக்கிறேன்
மன்மதனே உன்னில் வசிக்கிறேன்
உன்னை முழுதாக நானும் மென்று முழுங்கவோ
உந்தன் முன்னாடி மட்டும் வெட்கம் ஒதுக்கவோ
எந்தன் படுக்கை அறைக்கு
உந்தன் பேரை வைக்கவோ
அடிமை சாசனம் எழுதி தருகிறேன்
என்னை ஏற்று கொள்ளு
ஆயுள் வரையில் உன்னுடன் இருப்பேன்
அன்பாய் பார்த்துக்கொள்ளு
அடிமை சாசனம் எழுதி தருகிறேன்
என்னை ஏற்று கொள்ளு
ஆயுள் வரையில் உன்னுடன் இருப்பேன்
அன்பாய் பார்த்துக்கொள்ளு



Авторы: Yuvan Shankar Raja


Yuvan Shankar Raja,Sadhana Sargam - Manmadhan (Original Motion Picture Soundtrack)
Альбом Manmadhan (Original Motion Picture Soundtrack)
дата релиза
07-11-2016




Внимание! Не стесняйтесь оставлять отзывы.