Devan and Sujatha - May Madam Lyrics

Lyrics May Madam - Devan and Sujatha



மே மாத மேகம் என்னை நில் என்று சொல்ல பட பட
பேசாத பெண்மை என்னை பேர் சொல்லும்போது கால்கள் தட தட
ஆண் வாடை காற்று என் ஆடைக்குள் மோத பட பட
போர் செய்யும் பார்வை என் நெஞ்சோடு மோத கால்கள் தட தட
புன்னகை சொட்டு புன்னகை என்னை புலவனாய் மாற்றுதே
பூமியும் அந்த வானமும் சின்ன புள்ளியாய் போனதே
கண்களே அந்த கண்களே எந்தன் கற்பினை தீண்டுதே
பூவுக்கும் ஈட்டி வேலுக்கும் இன்று போர்க்களம் மூண்டதே
சில நேரம் வேலும் வெல்லலாம்
பல நேரம் பூவும் வெல்லலாம்
அதுதானே காதல் யுத்தம் அன்பே
வென்றாலும் இனிமை கான்பதும்
தோற்றாலும் பெருமை கான்பதும்
இங்கேதான் காணக்கூடும் அன்பே
மே மாத மேகம் என்னை நில் என்று சொல்ல பட பட
மே மாத மேகம் என்னை நில் என்று சொல்ல...
பறவைகள் பேசும் மொழிகளை காற்று அறியுமா இல்லையா
கண்களால் பேசும் மொழிகளை காதல் அறியனும் இல்லையா
மலைகளை கட்டி இழுப்பது எனக்கு சுலபம்தான் இல்லையா
மனதிலே உள்ள காதலை இறக்கி வைப்பதே தொல்லையா
போ போ போ என்னும் சொல்லுக்கு
வா வா வா என்று அர்த்தமே
அகராதி இங்கு மாறும் அன்பே
ஆடைக்குள் மூடி நிற்கிறாய்
அது கூட வேறு அர்த்தமா
ஆஹாஹா புரிஞ்சு போச்சு அன்பே
மே மாத மேகம் என்னை நில் என்று சொல்ல பட பட
பேசாத பெண்மை என்னை பேர் சொல்லும்போது கால்கள் தட தட
ஆண் வாடை காற்று என் ஆடைக்குள் மோத பட பட
போர் செய்யும் பார்வை என் நெஞ்சோடு மோத கால்கள் தட தட
மே மாத மேகம் என்னை நில் என்று சொல்ல...
மே மாத மேகம் என்னை நில் என்று சொல்ல...




Devan and Sujatha - Shajahaan (Original Motion Picture Soundtrack)
Album Shajahaan (Original Motion Picture Soundtrack)
date of release
23-10-2010



Attention! Feel free to leave feedback.