Madhushree - Un Pere Theriyadhu Lyrics

Lyrics Un Pere Theriyadhu - Madhushree




செய்... யா செய்... யா
உன் பேரே தெரியாது உன்னை கூப்பிட முடியாது
நான் உனக்கோர் பேர் வைத்தேன்! உனக்கே தெரியாது
அந்த பேரை அறியாது, அட யாரும் இங்கேது?
அதை ஒருமுறை சொன்னாலே... தூக்கம் வாராது
அட தினம்தோறும் அதைச் சொல்லி உன்னை கொஞ்சுவேன்
நான் அடங்காத அன்பாலே உன்னை மிஞ்சுவேன்
என்ன னானான ஆலமுத்து
Be-a-batman'ஆ நா நாச்சிமுத்து
Then-be-a-sweetheart நான் சோ சோழமுத்து
I want even better nah-nah-nah-nah
You never find a better time
Make a stand you'll be fine
சூடான பேரும் அதுதான், சொன்னவுடன் உதடுகள் கொதிக்கும்
சூரியனை நீயும் நினைத்தால் அது இல்லையே
ஜில்லென்ற பேரும் அதுதான், கேட்டவுடன் நெஞ்சம் குளிரும்
நதியென்று நீயும் நினைத்தால் அது இல்லையே
சிலிர்க்கவைக்கும் தெய்வமில்லை
மிரளவைக்கும் மிருகமில்லை
ஒளிவட்டம் தெரிந்தாலும் அது பட்டப்பேரில்லை
என் பேரின் பின்னால் வரும் பேர் நான் சொல்லவா?
You never find a better time
Make a stand you'll be fine
ல-ல-ல-ல ல-ல-ல-ல
பெரிதான பேரும் அதுதான் (அ-அ)
சொல்ல சொல்ல மூச்சே வாங்கும் (அ-அ)
எத்தனை எழுத்துக்கள் என்றால் விடையில்லையே
ஹோ சிறிதான பேரும் அதுதான்
சட்டென்று முடிந்தே போகும்
எப்படி சொல்வேன் நானும் மொழி இல்லையே
சொல்லிவிட்டால் உதடு ஓட்டும்
எழுதிவிட்டால் தேனும் சொட்டும்
அது சுத்த தமிழ் பெயர்தான்
அயல் வார்த்தை அதில் இல்லை
என் பேரின் பின்னால் வரும் பேர் நான் சொல்லவா
நா நா நாச்சிமுத்து
உன் பேரே தெரியாது உன்னை கூப்பிட முடியாது
நான் உனக்கோர் பேர் வைத்தேன்! உனக்கே தெரியாது
அட தினம்தோறும் அதைச் சொல்லி உன்னை கொஞ்சுவேன்
நான் அடங்காத அன்பாலே உன்னை மிஞ்சுவேன்



Writer(s): Na. Muthukumar, C. Sathya



Attention! Feel free to leave feedback.