Neha Venugopal feat. Kapilan Kugavel & Raj Thillaiyampalam - Kadhal Oru Vizhiyil (feat. Neha Venugopal) Lyrics

Lyrics Kadhal Oru Vizhiyil (feat. Neha Venugopal) - Raj Thillaiyampalam , Kapilan Kugavel




காதல் ஒரு விழியில் உன்னை காண என் நெஞ்சம் உறையும்
காமம் ஒரு விழியில் உன்னை காண என் தேகம் கரையும்
காதில் இதழ் வைத்து உன் ஆசை நீ கூறினாலே
பார்வை மழையாலே என் மார்பில் நீ தூறவே
நெருப்பினில் நனைந்திடுவேனா உன் அனைபினில் எரிந்திடுவேனா
சிறகுகள் விரிதிடுவேனா அந்த வானில் காதல் புரிய
உரசலே உடல்களின் கோடை உன் விரல் தொட விலகுது ஆடை
இரவிது விரகத்தின் மேடை அதில் நீயும் நானும் எரிய
நடு முதுகினில் ஊர்ந்து போகும்
உனதொரு விரல் எங்கு நகரும்
உன் பயணத்தில் தொலைதேன் நானே
என்னை நானே தேடுகிறேன்
உனதிதழ்களின் பாதங்கள்
என் மேனியில் நீ வைத்து செல்ல
வழி தொடர்ந்திட பார்க்கிறேன்
என் இதயத்தில் முடிந்ததே
நெருப்பினில் நனைதிடுவேனா உன் அணைப்பினில் எரிந்துடுவேனா
சிறகுகள் விரித்திடுவேனா அந்த வானில் காதல் புரிய
பாலில் விழும் தேனை போல
காற்றில் விழும் ஓசை போல
நீரில் விழும் வண்ணம் போல
நீ என்னுள் விழுந்துவிடு
எதுவரை வலி தாங்குவேன்
உன் ஆண்மையை நான் கேள்வி கேட்க்க
விடையளித்திட போகிறாய்
நீ கூறினால் என்ன ஆகுவேன்
உரசலே உடல்களின் கோடை உன் விரல் தொட விலகுது ஆடை
இரவிது விரகத்தின் மேடை அதில் நீயும் நானும் எரிய
காதல் ஒரு விழியில் உன்னை காண என் நெஞ்சம் உறையும்
காமம் ஒரு விழியில் உன்னை காண என் தேகம் கரையும்
காதில் இதழ் வைத்து உன் ஆசை நீ கூறினாலே
பார்வை மழையாலே என் மார்பில் நீ தூறவே



Writer(s): Madhan Karky Vairamuthu, Kapilan Kugavel, Rajkumar Thillaiyampalam



Attention! Feel free to leave feedback.