Yuvan Shankar Raja - Yaaradi Nee Lyrics

Lyrics Yaaradi Nee - Yuvan Shankar Raja



யாரடி நீ நானாக
அடி காலம் கையில் வருமே தானாக
போகும் வழி பூவாக
இனி காற்றில் மிதப்பேன் நானும் நூலாக
யாரோவாக நினைத்தேன்
பூவே உனக்காய் கனிந்தேன்
தீவில் நடுவில் மரமாய் நான் இருப்பேன்
ஓய்வாய் பறவை இருக்க
உறவாய் சிறகை விரிக்க
ஆழக்கடலில் படகாய்
இரவின் நிலவு நீ
புது புது மலைகளை அள்ளி
மலைகளும் குளித்திடுமே
உறவின்றி வளர்கின்ற வேம்பில்
பனை வந்து முளைத்திடுமே
சுட சுட சூரியன் கண்டு
உலகமும் துளிர்த்திடுமே
நகர்கின்ற மேகங்கள் போலே
துயரங்கள் நகர்ந்திடுமே
வானத்தின் தாரகை வாசல் தேடி வந்ததே
வாதைகள் தூரமாய் ஓடி போகுதே
அடி தாகங்கள் தீர்ந்து நீ
சாய்ந்து கொள்ளும் வேளையில்
தூதனை போலவே வந்தேன்
தாங்கி கொள்ளவே
கண்ணுக்குள் அச்சங்கள் நீங்கட்டுமே
காற்றினில் தென்றலும் நீந்தட்டுமே
நம்மோடு காலங்கள் சேரட்டுமே
ஒன்றோடு ஒன்றாக மாறட்டுமே
ஒரு வழி திறக்கின்ற போது
மறு வழி அடைக்கின்றதேனோ
மறு வழி அடைக்கின்ற பொது
ஒரு வழி திறந்திடும் தானே
திறந்திடும்
யாரடி நீ யாரடி நீ
யாரடி நீ யாரடி நீ
நீ நீ நீ நீ நீநீ
புது புது
மலைகளை அள்ளி
மலைகளும் குளித்திடுமே
உறவின்றி வளர்கின்ற வேம்பில்
பனை வந்து முளைத்திடுமே
சுட சுட சூரியன் கண்டு
உலகமும் துளிர்த்திடுமே
நகர்கின்ற மேகங்கள் போலே
துயரங்கள் நகர்ந்திடுமே
யாரடி நீ



Writer(s): Uma Devi, Bobo Shashi


Yuvan Shankar Raja - Jarugandi
Album Jarugandi
date of release
15-09-2018




Attention! Feel free to leave feedback.