B.S. Sasirekha - Naa Pudikkum Mapilatha 2 paroles de chanson

paroles de chanson Naa Pudikkum Mapilatha 2 - B.S. Sasirekha




நான் புடிக்கும் மாப்பிள்ளைதான்
நாடறிஞ்ச மன்மதன்டா
நான் போடுற கோட்டுக்குள்ள கட்டுப்பட்டு வாழணும் வீட்டுக்குள்ள
நான் கைக்கட்டி வாய்பொத்தி நில்லுன்னா நிக்கணும் டோய்
அடடடட ... நான் புடிக்கும் மாப்பிள்ளை தான்
மூஞ்சிய தூக்காம காஞ்சிப்புரப்பட்டு வாங்கி கொடுக்கணும் டோய்
ஆமாமாமா வாங்கி கொடுக்கணும் டோய்
ராத்திரி ஷோவுக்கு டூரிங் டாக்கீஸ் கூட்டிட்டு போகணும் டோய்
எங்களையும் கூட்டிட்டு போகணும் டோய் ஹாங்
சாமத்தில கால் வலிச்சா நீவி விட கத்துக்கணும்
சேவல் கோழி கூவும் முன்னே வாசலையும் கூட்டணும் டோய்
ஆஹா மொத்தத்தில் பொண்டாட்டி நீயில்ல மாப்பிள்ளை டோய்
அடடடட ... நான் புடிக்கும் மாப்பிள்ளை தான்
மாமான்னு கூப்பிட்டா ஏமான்னு கேட்காம தாப்பாள போடணும் டோய்
ஆமாமாமா தாப்பாள போடணும் டோய்
மானுன்னு தேனுன்னு மல்லிகை பூ வச்சு மாருல சாய்க்கணும் டோய்
ஆம்பிள்ளத்தான் பெத்துக்கணும் ஆரிராரோ பாடிக்கணும்
ஊர் உலகம் மெச்சும்படி மாமி என்ன வச்சுக்கணும்
ஒரு வப்பாட்டி கிப்பாட்டி வைக்காம பாத்துக்கணும்
அடடடட ... நான் புடிக்கும் மாப்பிள்ளை தான்...



Writer(s): Ilaiyaraaja, Muthulingam, Pulamaipithan, Kamarajan Na




Attention! N'hésitez pas à laisser des commentaires.