Hariharan feat. Chinmayi - Oru Thadavai paroles de chanson

paroles de chanson Oru Thadavai - Hariharan , Chinmayi Sripada




ஒரு தடவை சொல்வாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று
ஒரு பார்வை பார்ப்பாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று
காதல் ஒரு புகையை போல மறைத்து வைத்தால் தெரிந்து விடும்
காதலில் தான் பூக்கள் மோதி மலைகள் கூட உடைந்து விடும்
உன்னை ஒளிக்காதே என்னை வதைக்காதே
என்றும் இதயத்தில் இலக்கணம் கிடையாதே
நதியில் தெரியும் நிலவின் உருவம்
நதிக்கு சொந்தமில்லை
நினைப்பதெல்லாம் நடக்கும் வாழ்க்கை
யாருக்கும் அமைவதில்லை
உனக்கும் எனக்கும் விழுந்த முடிச்சு
தானாய் விழுந்ததில்லை
உலக உருண்டை உடையும் போதும்
காதல் உடைவதில்லை
மின்மினி தேசத்து சொந்தக்காரன் விண்மீன் கேட்பது தவறாகும்
வரலாற்றில் வாழ்கின்ற காதல் எல்லாம்
வலியோடு போராடும் காதல் தானே
ஒரு தடவை சொல்வாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று
ஒரு பார்வை பார்ப்பாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று
நெருங்க நினைக்கும் நினைவை மறக்க நெஞ்சம் நினைக்கிறது
கனவில் பூக்கும் பூக்கள் பறிக்க பெண்மை அழைக்கிறது
கிளையை முறித்து போட்டு விடலாம்
வேரை என்ன செய்வாய்
தரையை உடைத்து முளைக்கும் போது
அன்பே எங்கு செல்வாய்
மல்லிகை பூக்கள் உதிர்வதெல்லாம் மரத்தடி நிழலுக்கு சொந்தமில்லை
உன்னோடு நான் வாழ போராடுவேன்
நீ இன்றி போனாலும் தள்ளாடுவேன்
ஒரு தடவை சொல்வாயா உன்னை எனக்குப் பிடிக்கும் என்று
ஒரு பார்வை பார்ப்பாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று
காதல் ஒரு புகையை போல மறைத்து வைத்தால் தெரிந்து விடும்






Attention! N'hésitez pas à laisser des commentaires.