Srinivas feat. Mahalakshmi Iyer - Nenjam Orumurai paroles de chanson

paroles de chanson Nenjam Orumurai - Srinivas feat. Mahalakshmi Iyer



நெஞ்சம் ஒரு முறை நீ என்றது,
கண்கள் ஒரு நொடி பார் என்றது,
நெஞ்சம் ஒரு முறை நீ என்றது,
கண்கள் ஒரு நொடி பார் என்றது,
ரெண்டு கரங்கலும் சேர் என்றது,
உள்ளம் உனக்குத்தான் என்றது,
சத்தமின்றி உதடுகளோ முத்தம் எனக்கு தா என்றது,
உள்ளம் என்ற கதவுகளோ உள்ளே உன்னை வா என்றது,
நீதான் நீதான் எந்தன் உள்ளம் திறந்து,
உள்ளே உள்ளே வந்த முதல் வெளிச்சம்,
நீதான் நீதான் எந்தன் உயிர் கலந்து,
நெஞ்சை நெஞ்சை தொட்ட முதல் ஸ்பரிசம்,
கன்னம் என்னும் தீ அணைப்பு துறையில், (சாப்போ!)
உன் முத்தம்தானே பற்றி கொண்ட முதல் தீ, (ஷப்போபோ!)
கிள்ளும்போது எந்தன் கையில் கிடைத்த, (சாப்போ!)
உன் விரல்தானே நானும் தொட்ட முதல் பூ, (ஷப்போபோ!)
உன் பார்வைதானே எந்தன் நெஞ்சில் முதல் சலணம்,
அன்பே, என்றும் நீ அல்லவா,
கண்ணால் பேசும் முதல் கவிதை,
காலமுள்ள காலம் வரை, நீதான் எந்தன் முதல் குழந்தை,
நெஞ்சம் ஒரு முறை நீ என்றது,
கண்கள் மறுமுறை பார் என்றது
காதல் என்றால் அது பூவின் வடிவம்,
ஆனால் உள்ளே அது தீயின் உருவம்,
காதல் வந்தால் இந்த பூமி நழுவும்,
பத்தாம் கிரகம் ஒன்று பாதம் பரவும்,
காதல் வந்து நெஞ்சுக்குள்ளே நுழையும், (சாப்போ!)
ஒரு தப்ப வெப்ப மாற்றங்களும் நிகழும், (ஷப்பப்போ!)
காதல் வந்து கண்ணை தட்டி எழுப்பும், (சாப்போ!)
அது ஊசி ஒன்றை உள்ளுக்குள்ளே அனுப்பும், (ஷப்பப்போ!)
இந்த காதல் வந்தால் இலை கூட மாலை சுமக்கும்,
காதல் என்ற வார்த்தையிலே, ஒன்றாய் சேர்ந்து நாம் தொலைவோம்,
காதல் என்ற காற்றினிலே, தூசி போல நாம் அலைவோம்,
நெஞ்சம் ஒரு முறை நீ என்றது,
கண்கள் மறுமுறை பார் என்றது,
ரெண்டு கரங்கலும் சேர் என்றது,
உள்ளம் உனக்குத்தான் என்றது,
சத்தமின்றி உதடுகளோ முத்தம் எனக்கு தா என்றது,
உள்ளம் என்ற கதவுகளோ உள்ளே உன்னை வா என்றது,




Srinivas feat. Mahalakshmi Iyer - Vaseegara
Album Vaseegara
date de sortie
21-08-2019



Attention! N'hésitez pas à laisser des commentaires.